இது என்னய்யா புது ட்ரெண்டா இருக்கு! பெட்ரோல் விக்கிற விலைக்கு பேசாம குடும்பத்தோட இப்படித்தான் போகணும் போல!

இது என்னய்யா புது ட்ரெண்டா இருக்கு! பெட்ரோல் விக்கிற விலைக்கு பேசாம குடும்பத்தோட இப்படித்தான் போகணும் போல!

தற்போதைய விலை வாசி உயர்வால், எது மாறியதோ இல்லையோ, மக்களின் கற்பனைத் திறன் தான் அதிகரித்துள்ளது.

ஒரு இரு சக்கர வாகனத்தில் கண்டிப்பாக இருவருக்கு மேல் பயணிக்க முடியாது. இந்த நிலையில், தற்போது ஒரு வீடியோ சமூக வலைத் தளங்களில் படு வைரலாகி, அனைவரையும் நெகிழ வைத்து வருகிறது.

நான்கு பேர், ஒரு ஹோட்டலில் உணவு அருந்துவது போல, டேபிளில் அமர்ந்த படி, தட்டு உணவு, நான்கு நாற்காலி, என ஒரு பைக்கை மாற்றி வடிவமைத்து, ஒருவர் மட்டும் ஓட்டிக் கொண்டு, பெட்ரோல் பங்கிற்கு வருகிறார்.

அங்கு வண்டியில் பெட்ரோல் நிரப்பி பின், அங்கிருந்து அனைவரும் வெளியேறுகின்றனர். நகைச்சுவையாக இருந்தாலும் இன்றைய பெட்ரோல் விலைக்கு இது போன்ற புதுமை உதவியாக இருக்கும் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து பகிர்ந்து வருகின்றனர்.