4 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து விழுந்து டிக்டாக் பிரபலம் பலி...!

4 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து விழுந்து டிக்டாக் பிரபலம் பலி...!
Published on
Updated on
1 min read

சாகச விளையாட்டில் ஈடுபட்டிருந்த டிக்டாக் பிரபலம், 4 ஆயிரம் அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கனடா நாட்டின் ஒடரியோ மாகாணம், டொரண்டோ பகுதியை சேர்ந்தவர் தன்யா பர்டஷி. கல்லூரி மாணவியான இவர் 2017 ஆம் ஆண்டு நடந்த மிஸ் டீன் கனடா அழகி போட்டியில் பங்கேற்று இறுதி சுற்று வரை சென்றுள்ளார். அத்துடன், டிக்டாக்கில் கூட பிரபலமானவர் தான் தன்யா பர்டஷி.

இந்நிலையில், நேற்று வானில் இருந்து கீழே குதித்து சாகத்தில் ஈடுபடும் ஸ்கை டைவிங் விளையாட்டில் ஈடுபட்டிருந்தார். அப்போது, எதிர்பாரத விதமாக அவரின் பாரசூட்டில் ஏற்பட்ட பழுது காரணமாக உரிய நேரத்தில் பாரசூட்டை திறக்க முடியாமல், 4 ஆயிரம் அடி உயரத்திலிருந்து தரையில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com