"தி எலிபன்ட் விஸ்பரரர்ஸ்”: ஆஸ்கர் தம்பதியினருடன் செல்பி எடுக்கும் சுற்றுலா பயணிகள்..!

"தி எலிபன்ட் விஸ்பரரர்ஸ்”: ஆஸ்கர் தம்பதியினருடன் செல்பி எடுக்கும் சுற்றுலா பயணிகள்..!
Published on
Updated on
1 min read

ஆஸ்கர் புகழ் ஆவண குறும்படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதியினருடன் சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில், அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்தும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் வார விடுமுறையான இன்று யானைகள் முகாம், அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

குறிப்பாக, ஆஸ்கார் விருதுபெற்ற ஆவண குறும்படமான  "தி எலிபன்ட் விஸ்பரரர்ஸ்" படத்தில் நடித்த ரகு மற்றும் பொம்மி ஆகிய குட்டி யானைகளை காண குவிந்து வருகின்றனர். மேலும் இந்த ஆவண குறும்படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதியினருடன் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்தும், புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்து வருகின்றனர்.

இதற்கிடையில் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் கூறுகையில், தி எலிபென்ட் விஸ்பரரர்ஸ் ஆவணக் குறும்படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி ஆகியோரை  திரையில் பார்த்ததை விட தற்போது நேரில் பார்த்தது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com