டுவிட்டர் மூத்த தலைமை அதிகாரிகள் இருவர் ராஜினாமா - கேள்விக்குறியாகும் டுவிட்டர் எதிர்காலம்!

டுவிட்டர் மூத்த தலைமை அதிகாரிகள் இருவர் ராஜினாமா - கேள்விக்குறியாகும் டுவிட்டர் எதிர்காலம்!

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ள நிலையில் அதன் மூத்த தலைமை அதிகாரிகள் இருவர் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டுவிட்டரை வாங்கியதில் இருந்து எலான் மஸ்க் படு உற்சாகத்தில் இருந்தாலும் டுவிட்டர் ஊழியர்கள் என்னவோ சோகத்தில் உள்ளனர்.  எலான் மஸ்க் தலைமையில்  டுவிட்டரின் எதிர்காலம் இருண்டு விட்டதாக அதன் தலைமை அதிகாரிகளில் ஒருவர் கூறியிருந்தார்.

போலி தகவல்களை கையாளும் முறையில் எலான் மஸ்க் தலைமையிலான டுவிட்டர் நிறுவனம் மேலும் மோசமான நிலையை சந்திக்கும் என பில் கேட்ஸ் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை அதிகாரிகளில் இருவர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.