இஸ்லாமிய மாணவரை தாக்குமாறு கூறிய உ.பி. ஆசிரியை...! ராகுல் காந்தி ஆவேசம்...!

இஸ்லாமிய மாணவரை தாக்குமாறு கூறிய உ.பி.  ஆசிரியை...! ராகுல் காந்தி ஆவேசம்...!

உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகரில் இஸ்லாமிய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த கூறிய ஆசிரியையின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  

இந்த வீடியோ தொடர்பாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினா்  ராகுல் காந்தி தனது கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.

அதில், ” அப்பாவி குழந்தைகளின் மனதில் பாகுபாடு என்ற விஷத்தை விதைத்து, பள்ளி போன்ற புனித இடத்தை நெருப்பின் சந்தையாக மாற்றுவது மோசமான செயல் எனவும்  இதை விட மோசமாக ஒரு ஆசிரியரால் நாட்டுக்கு எதுவும் செய்ய முடியாது”,  எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க   |  முஸ்லிம் மாணவனை சக மாணவர்களை விட்டு அடிக்கச் சொன்ன ஆசிரியை...! உத்திர பிரதேசத்தில் பள்ளியில் நடந்த அவலம்...!