
ஆவடி பேருந்து நிலையம் எதிரே புறப்பட தயாராக இருந்த பேருந்தை வழிமறித்த போதை ஆசாமி ஒருவர் அதன் பக்கவாட்டு கண்ணாடியை இரும்பு சங்கிலியை கொண்டு உடைத்துள்ளார். இதனால் பேருந்து ஓட்டுனர், நடத்துனர் உள்பட பயணிகளும் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து மதுபோதையில் இருந்த நபரை பிடித்து போலீசில் ஒப்படைக்க முயற்சித்த போது போதை ஆசாமி நடுரோட்டில் ஒய்யாரமாக படுத்துக் கொண்டு ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போதை ஆசாமியை கைது செய்து அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் போதை ஆசாமி ஒரு நாடோடி என்பது தெரியவந்தது.