
உலகிலேயே மிக பெரிய பாம்புகளாக கூறப்படுவது பைத்தான் இன பாம்புகள் தான். 20 அடிக்கும் கூடுதலாக வளர கூடிய இந்த வகை பாம்புகள் விஷமற்றவை என்றாலும், தனது எடையை விட பெரிய எடை கொண்ட விலங்குகளையும் இரையாக்க கூடிய திறன் படைத்தவையாம். சில சமயங்களில் மனிதர்களையும் கூட விழுங்கி விடும் என்று கூறுகிறார்கள். இவ்வகை பாம்புகள் பெரும்பாலும், ஆப்பிரிக்காவின் சஹாரா தென்பகுதிகள், இந்தியா, நேபாளம், வங்காள தேசம், இலங்கை, தென்கிழக்கு ஆசியா, தென்கிழக்கு பாகிஸ்தான், தெற்கு சீனா, பிலிப்பைன்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் தான் அதிகம் காணப்படுகின்றன.
இந்நிலையில் இந்த வகை பாம்பினை தனது தோளில் சுமந்து நடனம் ஆடும் ஒரு வாலிபரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், இந்தோனேசியா நாட்டில் இளைஞர் ஒருவர் தனது இரு தோள்களிலும் 20 அடிக்கும் கூடுதலான நீளம் கொண்ட இரண்டு பாம்புகளை தொங்க விட்டபடியே நடனம் ஆடியுள்ளார். மேலும் மிக கவனமுடன் பக்கவாட்டில் சென்றபடியே அவர் ஆடும் இந்த நடன வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.