கனமழையால் வீடுகளில் புகுந்த நீர்...! அவதியடைந்த மக்கள்...!!  மகிழ்ச்சியோடு நடனமாடிய இளைஞர்...!!

கனமழையால் வீடுகளில் புகுந்த நீர்...! அவதியடைந்த மக்கள்...!!  மகிழ்ச்சியோடு நடனமாடிய இளைஞர்...!!
Published on
Updated on
2 min read

காஞ்சிபுரத்தில் 2 மணி நேரம் பெய்த கனமழையால் வீடுகளில்  மழைநீர் உள்ளே புகுந்ததால் மக்கள் அவதியடைந்தனர்.

காஞ்சிபுரத்தில் கடந்த சில தினங்களாக கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் நேற்று மாலை நேரத்தில் திடீரென கரு மேகங்கள் சூழ்ந்து காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த சூரை காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. தொடர்ந்து இரண்டு மணி நேரமாக பெய்த கனமழையால் காஞ்சிபுரம் மாநகரில் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுயது. இதனால் சாலையில் நடக்க முடியாமலும் வாகனத்தை ஓட்ட முடியாமலும் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகினர்.

இந்நிலையில் காஞ்சிபுரம் 20 வது வார்டு உட்பட்ட விஜயகிராமி தெரு, ஐதர்பேட்டை பகுதிகளில் மழை நீர் வீட்டிற்குள் புகுந்தது. மழைநீருடன் கழிவுநீரும் கலந்து சென்றதால் வீட்டில் குடியிருப்பவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். மேலும் காஞ்சிபுரம் மேற்கு ராஜ வீதியில் அமைந்துள்ள கந்தபுராணம் அரங்கேற்றிய திருக்கோவிலான குமரகோட்டம் முருகன் கோவிலில் உள்ளே மழை நீர் சென்று தேங்கியால் பக்தர்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

இது ஒருபுறம் இருக்க காஞ்சிபுரத்தில் இளைஞர் ஒருவர் மழை நீரில் குத்தாட்டம் போடும் வீடியோ வைரலாகியுள்ளது. 2 மணி நேரமாக பெய்த கனமழையில் காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில் அருகே மழைநீர் தேங்கி நின்றது. கழிவு நீருடன் கலந்து வந்து இந்த மழை நீரில் இளைஞர் ஒருவர் குழந்தை போல் இறங்கி நடனமாடியுள்ளார்.

அவ்வப்போது நீச்சலிடித்தபடியே அவர் ஆடிய நடனம் சமூக வலைதளங்களில் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இந்த நபர் போதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com