நாங்களும் சாப்பிட வரோம்... யானைகள் அட்டகாசம்

நாங்களும் சாப்பிட வரோம்... யானைகள் அட்டகாசம்

கோவையில் பள்ளிவாசலுக்குள் புகுந்த காட்டு யானை கூட்டங்கள் அங்கு சமைத்து வைத்திருந்த உணவு பொருட்களை  சாப்பிட்டுவிட்டு சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் காட்டு யானைகள், மான், புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட  ஏராளமான வன உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. மேட்டுப்பாளையம் வனப்பகுதி யானைகளின் வலசைப் பாதை என்பதால் காட்டு யானைகளின் எண்ணிக்கை அதிகம். கடந்த இரு மாத காலத்திற்கும் மேலாக இக்காட்டு பகுதியில் மழை இல்லாத காரணத்தினாலும் தற்போது கோடை காலம் துவங்கி உள்ளதாலும் காட்டினுள் தண்ணீர் கிடைக்காததனால் வனவிலங்குகள் காட்டை விட்டு வெளியே வந்து உணவுகளை தேடி வருகிறது. இந்த நிலையில் மேட்டுப்பாளையம் அடுத்த பர்லியார் பகுதியில் உள்ள பள்ளிவாசலுக்குள் இரவு நேரத்தில் நுழைந்த காட்டு யானைகள் அங்குள்ள பொருட்களை சேதம் செய்து  உணவு பொருட்களை  சாப்பிட்டுவிட்டு சென்ற வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.