மற்ற தினத்தைப் போலவே ”மனைவியா் தினம்” கொண்டாட வேண்டும் - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே வலியுறுத்தல்!

மற்ற தினத்தைப் போலவே ”மனைவியா் தினம்” கொண்டாட வேண்டும் - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே வலியுறுத்தல்!

மனைவியா் தினம் கொண்டாட வேண்டும் என மத்திய இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே வலியுறுத்தியுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் சாங்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு  மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே பேசினார்.

அப்போது நமது நல்லது, கெட்டது என அனைத்திலும் மனைவி நம்முடன் துணையாக இருப்பதாகவும், ஒவ்வொரு ஆண்மகனின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாா் என கூறுவார்கள் என்றும் குறிப்பிட்டார்.  எனவே மனைவியா் தினம் கொண்டாடப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.