ராகுல் காந்தியின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சிப்பதற்கு நீங்கள் யார்? - மேற்கு வங்க எம்.பி.

ராகுல் காந்தியின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சிப்பதற்கு நீங்கள் யார் என்ற தோனியில் மேற்கு வங்க எம்.பி மஹுவா மொய்த்ரா பாஜக-வை கடுமையாக சாடியுள்ளார்.
ராகுல் காந்தியின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சிப்பதற்கு நீங்கள் யார்? - மேற்கு வங்க எம்.பி.
Published on
Updated on
1 min read

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்ட வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. ராகுலின் இத்தகைய செயலை பாஜக தலைவர்கள் பலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

அதன் வரிசையில் 2008 மும்பை குண்டுவெடிப்பின் போதும் ராகுல் இவ்வாறு தான் பார்ட்டியில் பங்கேற்றதாக சமூக வலைதளங்களில் பகிர்ந்த பாஜக சமூக ஊடகத் துறைத் தலைவர் அமித் மால்வியாவைக் கண்டித்த மேற்கு வங்க எம்.பி  மஹுவா மொய்த்ரா டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ராகுல் காந்தியோ அல்லது வேறு யாரேனும்  ஒருவரது தனிப்பட்ட வாழ்கை குறித்து கேள்வி எழுப்புவதற்கும் விமர்சிப்பதற்கும் நீங்க யார் என பாஜக-வை கடுமையாக விமர்சித்துள்ளார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com