சமூக நீதி காத்த வீரமங்கை - மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு யார்?

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் சாதிவெறியர்களுக்கு அஞ்சி செயலிழந்து கிடக்காமல் துணிந்து களமிறங்கி நீதியின்பக்கம் நின்று நடவடிக்கைகளை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் ( ஐ.ஏ.எஸ்) கவிதா ராமு.

சமூக நீதி காத்த வீரமங்கை - மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு யார்?

இணையம் முழுவதுமாய்  இரண்டு நாட்களாக திரும்பும் திசை சமூக நீதி காத்த வீரமங்கை  எனவும் தொடர்ந்து தேடப்பட்ட நபராக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு.

யார் இந்த கவிதா ராமு 

இவர்  மதுரையில் பிறந்தவர். இவரின் தந்தை ராமு ஒய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி. தன்னுடைய 8 வயதில் மதுரையில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டில் பரத நாட்டியமாடியவர். 12 ஆம் வகுப்பில் 93.4% மதிப்பெண்ணுடன் தேர்ச்சிபெற்றிருக்கிறார். பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றவர்.

Kavitha Ramu (IAS) Biography, Age, Family & Images - MixIndia

  தன்னுடைய பாரத நாட்டிய வீடியோ பதிவேற்றம் செய்வதும் அந்த வீடியோவின் கீழே பாரதநாட்டியம் ஒரு சமூகத்தை சார்ந்தவர்களுக்கு மட்டுமே  என்பதை கட்டுடைத்து கலை அனைவருக்குமானது எனவும் சொல்லியவர்.


 மேலும் படிக்க | ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா திருவண்ணாமலையில் சாமி தரிசனம்


இவரின் பணி :

  வேலூரில் முதன்முதலாக வருவாய் கோட்ட அலுவராக பணியில் சேர்ந்தார். அதன் பிறகு சென்னை சிவில் சப்ளைஸ் உதவி ஆணையராகவும், நுகர்வோர் பாதுகாப்பு துறை இணை  இயக்குநர். மாநிக குழந்தைகள் வளர்ச்சி திட்ட இயக்குநர்.    2021 ஆம் ஆண்டு மே மாதம் முதலமைச்சராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் அவர்களை ஜூன் 13 தேதிஅரசு அதிகாரி  என்கின்ற முறையில் சந்திப்பு நிகழ்ந்தது அந்த நிகழ்ச்சியில் முதலமைச்சருக்கு  ஒரு புத்தகத்தினை பரிசாக வழங்கினார்  அந்த புத்தகத்தின் பெயர் ”அறியப்படாத கிறிஸ்துவம்”என்பதே ஆகும் . இந்த புத்தகத்தினை வழங்கிய பிறகு பெரும் விமர்சனத்திற்கு ஆளாகி நின்றார் என்பதே உண்மை.

Meet Kavitha Ramu: An IAS officer by profession and a dancer by passion

2014 ல் ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று புதுக்கோட்டை மாவட்டத்தின் 41 வது மாவட்ட ஆட்சியராக  ஜூன் 21 ம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார் கவிதா ராமு.

சிறுவன் உயிரிழப்பு உடனடி நடவடிக்கை 

 தன்னுடைய பாட்டி வீட்டில் விளையாடி கொண்டிருந்த சிறுவன் புகழேந்தியின் தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்து  உயிரிழ்ந்த சம்பவம் .துப்பாக்கி குண்டு பாய்ந்து சிறுவன் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து நார்த்தாமலை அருகே புகழேந்தியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் இரவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். 
சிறுவனின் உயிரழப்பிற்கு காரணம்  நார்த்தாமலை அருகே பசுமலைப்பட்டியில் தமிழக காவல் துறையின் துப்பாக்கி சுடும் பயற்சித் தளம் உள்ளது. இங்கு கடந்த ஆண்டு 30-ம் தேதி மத்திய தொழில பாதுகாப்பு படையினரும், தமிழக போலீஸாரும் தனித்தனியே துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டும் போது தவறி துப்பாக்கி குண்டு பட்டதே காரணம்.

உடனடியாக துப்பாக்கிசூடு பயிற்சி மையத்தை மூடக்கோரியும் உத்தரவு பிறப்பித்தார் மாவட்ட ஆட்சியரான கவிதா ராமு.

Kavitha Ramu (IAS) Biography, Age, Family & Images - MixIndia

மேலும் படிக்க | முகமற்ற முகமூடியா கார்கே...காங்கிரஸ் கூறுவதென்ன?

 2019 உச்சிமாநாட்டிற்காக சீனாவின் அதிபர் ஜி ஜின்பிங் அக்டோபர் 11 தேதி இந்தியாவிற்கு வருகை தந்தார் அவரை வரவேற்க தமிழகத்தின் பாரம்பரிய நடனத்தை ஏற்பாடு செய்து பிரதமர் மோடி மற்றும் சீன அதிபரின் பாராட்டைபெற்ற பெருமையும் இவரை சாரும்.

Kavitha Ramu: IAS by Profession, Bharatanatyam Dancer by Passion

2022 ல் தமிழ் நாட்டில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் விளையாட்டில் விழிப்புணர்வு பாடல் ஏற்பாடு செய்தவர். அரசியலமைப்பு சட்ட படி  அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களும் தேசிய கொடியேற்றலாம் என்பதை மறந்து பல ஊர்களில் கொடியேற்ற விட வில்லை  அதை தவிடுபிடியாக்கியவர்.  2022 சுதந்திர தின விழாவில் ஆதிதிராவிடர் ஊராட்சி மன்றத் தலைவர் கீழையூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தேசிய கொடியை இவரின் முயற்சியால் ஏற்ற வைத்தார்.