பிரதமர் மோடி ஏன் பத்திரிகையாளர்கள் முன் வருவதில்லை? - மல்லிகார்ஜூன கார்கே கேள்வி!

பிரதமர் மோடி ஏன் பத்திரிகையாளர்கள் முன் வருவதில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரதமர் மோடி ஏன் பத்திரிகையாளர்கள் முன் வருவதில்லை? - மல்லிகார்ஜூன கார்கே கேள்வி!

ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் காங்கிரஸின் 3 நாள் ‘சிந்தனை அமர்வு’ மாநாடு இன்று தொடங்கவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக அங்கு சென்றுள்ள மாநிலங்களவை எதிர்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன, காங்கிரஸை வலுப்படுத்த இந்த கூட்டம் நடைபெறுவதாக தெரிவித்தார்.

அப்போது பிரதமர் மோடியை தாக்கி பேசிய அவர், பத்திரிகையாளர்கள் முன்னால் அவர் வராமல் இருப்பது ஏன் என தன்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றும், ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் பாதுகாப்பது முக்கியம் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும்  எதிர்ப்புகளை அடக்க பாஜக முயற்சிப்பதாக சாடிய அவர்,   பேச்சுரிமை பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.