திடீர் உணவகமாக மாறிய பேருந்து நிறுத்தம்...அதிர்ச்சியில் பயணிகள்!

திடீர் உணவகமாக மாறிய பேருந்து நிறுத்தம்...அதிர்ச்சியில் பயணிகள்!

பழனி அருகே பேருந்து நிறுத்தம் திடீர் உணவகம் போல் மாறி இருப்பதால் பயணிகள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் சாலையில் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வரதமா நதி அணையை காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். 

இந்நிலையில், அணைக்கு மிக அருகே உள்ள பேருந்து நிறுத்துமிடம் உணவகமாக மாற்றப்பட்டுள்ளது. மக்கள் அமரும் இடம் சாப்பிடும் இடமாக திடீர் உணவகம் போல் தோற்றமளிப்பதால் பேருந்து நிறுத்தம் எது என்று அறியாமல் மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

இருப்பினும், பேருந்து நிறுத்ததை ஆக்கிரமித்து உணவகமாக மாற்றிய சம்பவம் சுற்றுலா பயணிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com