தமிழகத்தில் தொடரும் மழையானது, பல இடங்களில் வெள்ளப்பெருக்காக உர்வெடுத்து பொதுமக்களின் வாழ்வியலை பாதித்து வருகிறது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில், பல பகுதிகள் வெள்ளம் அணைத் தாண்டி பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இந்த நிலையில், ஒரு சிறுவன், தனது பள்ளியில் விடுமுறை அறிவித்ததை, செய்தி வாசிப்பாளர் போல நடித்துக் காட்டியிருக்கிறார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட நிலையில், பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் அணை நிரம்பி வருவதை படம்பிடித்து தொலைக்காட்சி நிரூபராக மாறிய சிறுவனின் சேட்டை வீடியோ வைரலாகி வருகிறது. தொடர் கன மழை காரணமாக கூடலூர் பகுதிகளில் அணைகள் நிரம்பி காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் மாயாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கூடலூர் சொக்கநள்ளி அருகே உள்ள தடுப்பு அணையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனை தொலைக்காட்சி நிருபர்கள் தொகுத்து வழங்குவது போல் அப்பகுதி சிறுவர்கள் ஒளிப்பதிவு செய்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.