“தங்க வைர ஆபரணங்கள் மண்ணுக்குள் புதைப்பு;  சீமான்மீது வருமான வரித்துறை சோதனை நடத்த வேண்டும்” - நடிகை விஜயலெட்சுமி.

“தங்க வைர ஆபரணங்கள் மண்ணுக்குள் புதைப்பு; சீமான்மீது வருமான வரித்துறை சோதனை நடத்த வேண்டும்” - நடிகை விஜயலெட்சுமி.

நாம் தமிழர் கட்சி சீமானை குறித்து தமிழர் முன்னேற்ற படை ஒருங்கிணைப்பாளர் வீர லக்ஷ்மி மற்றும் நடிகை விஜயலட்சுமி இருவரும் இணைந்து ஒரு காணொளியை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர்.

அதில்....” சீமான் தன்னுடன் நெருக்கமாக இருக்கும் பொழுது வெறும் பத்தாயிரம் 20 ஆயிரம் ரூபாய்க்கு தன்னுடைய காலடியில் இருந்ததாகவும்,

 அதிர்ச்சி தகவலாக ஸ்பீசர்லாந்தில் இருந்தும் ஜெனிவாவில் இருந்தும் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க வைர ஆபரணங்கள் வைரம் பதித்த கை கடிகாரம் ஆகியவை பலரிடம் இருந்து அவருக்கு வரும் எனவும்,  அதனை தனது தாயாரிடம் கொடுத்து பூமிக்கு அடியில் புதைத்து வைத்ததாகவும் சில அதிர்ச்சியூட்டும் தகவல்களை தெரிவித்தனர்.

மேலும், 15 ஆண்டுகளுக்கு முன்னால் அவர் வைத்திருந்த தங்க வைர ஆவணங்களில் மதிப்பு 15 லட்சம் ஆகும் எனவும், அப்படி இருந்தவர் இப்பொழுது தன்னிடம் வீட்டு வாடகை கொடுக்க கூட காசு இல்லை என கூறுகின்றார்.  வருமான வரித்துறை சோதனை வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என்று கூறுகிறார்”, 

” இதனை முதலமைச்சர் கருத்தில் கொண்டு அவர் மீது வருமான வரித்துறை சோதனை நடத்த வேண்டும் என்றும், அவரிடம் உள்ள வைர நகைகள் இப்போது இருக்கிறதா என்று அவரிடம் சோதனை செய்து மக்களிடம் உண்மையைக் கொண்டு செல்ல வேண்டும்”,  என்றும்  பதிவிட்டு உள்ளனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com