ரசிகர்களின் வங்கி கணக்கில் பணம்: சத்தமின்றி உதவி செய்யும் சூர்யா!

கொரோனா பேரிடர் காலத்தில் நலிவடைந்து இருக்கும் தனது ரசிகர்களுக்கு நடிகர் சூரியா பண உதவி அளித்துள்ளார். 
ரசிகர்களின் வங்கி கணக்கில் பணம்: சத்தமின்றி உதவி செய்யும் சூர்யா!
Published on
Updated on
1 min read

கொரோனா பேரிடர் காலத்தில் நலிவடைந்து இருக்கும் தனது ரசிகர்களுக்கு நடிகர் சூரியா பண உதவி அளித்துள்ளார். 

கொரோனா பெரும்தொற்று காலத்தில் ஏழை, எளிய மக்களை தொடர்ந்து நடுத்தரவர்க்கத்தினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இதையடுத்து தமிழக அரசு கொரோனா நிவாரண நிதியாக குடும்ப அட்டைதாரர்களுக்கு 4000 ரூபாய் மற்றும் மளிகை பொருட்கள் உள்ளிட்ட உதவிகளை செய்து வருகிறது. அது மட்டுமின்றி திரையுலக பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்களும் தங்களால் முடிந்தளவிற்கு ஏழை மக்களின் பசியை போக்கி வருகின்றனர்.

அந்த வகையில், நடிகர் சூர்யா வருமானமின்றி கஷ்டப்படும் தனது ரசிகர்களுக்கு அவர்களுடைய வங்கிக் கணக்கில் பணம் செலுத்தி உள்ள தகவல் வெளிவந்துள்ளது. நேற்று மட்டும் 250 சூர்யா ரசிகர்களின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதனை அடுத்து சூர்யாவின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com