குடிபோதையில் ஓட்டுநர், நடத்துனர் மீது தாக்குதல்... பேருந்துகளை இயக்க மறுத்து போராட்டம்... பொது மக்கள் அவதி..!

குடிபோதையில் ஓட்டுநர், நடத்துனர் மீது தாக்குதல்... பேருந்துகளை இயக்க மறுத்து போராட்டம்... பொது மக்கள் அவதி..!

பழனி அருகே பாலசமுத்திரத்திற்கு சென்ற மினி பேருந்தில் மதுபோதையில் சென்ற ஆசாமிகள் ஓட்டுநர் மற்றும் நடத்துனரை கல்லால் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பாலசமுத்திரம் பேரூராட்சிக்கு செல்ல மினி பேருந்துகள் இயக்கபட்டு வருகின்றன. நேற்று இரவு பழனி பேருந்து நிலையத்திலிருந்து பால சமுத்திரம் நோக்கி சென்ற மினி பேருந்தில் போதையில் ஒருவர் ஏறியுள்ளார். அப்போது பெண் ஆய்வாளர் ஒருவர் அந்த நபரை தடுத்து கீழே இறக்கி உள்ளார்.

இதில் ஆத்திரம் அடைந்த குடிபோதை ஆசாமிகள் ராமநாதன் நகர் அருகில் நின்று கொண்டு இருந்த மினி பேருந்து மூன்று நபர்களுடன் வந்து பேருந்துக்குள் ஏறி ஓட்டுநரையும் நடத்துனரையும் கல்லால் தாக்கியும், பேருந்தின் கண்ணாடியை உடைத்தும் ரகளையில் ஈடுபட்ட காட்சிகள் பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இது குறித்து அடிவாரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி மினி பேருந்து ஓட்டுநர்கள் நடத்துனர்கள் பேருந்துகளை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இன்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பேருந்து நிலையத்தில் திருஆவினன்குடி  செல்லும் பக்தர்கள் மற்றும் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் அவதி அடைந்துள்ளனர். இரவு நேரத்தில்  ஓட்டுனர்களும் நடத்துனர்களும் பேருந்துகளை இயக்காமல் தங்களுக்கு உரிய பணி பாதுகாப்பு இல்லை எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com