ஆளுநர் மாளிகையில் குண்டு வீச்சு: காவல் ஆணையர் விளக்கம்..!

ஆளுநர் மாளிகையில் குண்டு வீச்சு:  காவல் ஆணையர் விளக்கம்..!
Published on
Updated on
1 min read

குடியரசு தலைவர் நாளை வர உள்ள நிலையில் எந்த பாதுகாப்பு குறைபாடும் இல்லை என்று சென்னை பெருநகர தெற்கு கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா  தெரிவித்துள்ளார்.  

சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் கிண்டி ஆளுநர் மாளிகை நுழைவாயிலில் பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக சென்னை பெருநகர தெற்கு கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது  பேசிய அவர் கூறியதாவது :....

இன்று நண்பகல் 3 மணிக்கு சர்தார் வல்லபாய் பட்டேல் சாலையில் நபர் ஒருவர் ஆளுநர் மாளிகையை டார்கெட் செய்து ஒரு பாட்டிலில் பெட்ரோலை வைத்துக் கொண்டு வீச முயற்சி செய்தார்.

ஹைவே ரிசர்ச் சென்டரில் இருந்து பாட்டிலை விசா அவர் முயற்சி செய்து கொண்டிருந்தார், அப்போது பாதுகாப்பில் இருந்த காவலர்கள் உடனடியாக அவரை சரவுண்ட் செய்து விட்டனர்.

அவர் ஒரு பாட்டிலை வீசினார் அதில் எந்தவிதமான தீயும் வரவில்லை அந்த பாட்டில் உடைந்து கிடக்கிறது அந்த நபரை காவல்துறையினர் பிடிக்கும் பொழுது இன்னும் சில பாட்டில் இருந்தது அதனை காவல்துறையினர் கைப்பற்றி இருக்கிறார்கள்.

அந்த நபர் சர்தார் வல்லபாய் பட்டேல் சாலையில் இருந்து அந்த பாட்டிலை வீசும்பொழுது, ஆளுநர் மாளிகையின் மெயின் கேட்டில் இருக்கக்கூடிய பேரிகார்ட் அருகே அந்த பாட்டில் வந்து விழுந்தது இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

அந்த நபர் கறுக்கா வினோத். அவர் தேனாம்பேட்டையை சேர்ந்தவர் 2 வருடங்களுக்கு முன்பு ஒரு கட்சி அலுவலகம் முன்பும் பாட்டிலை வீசி இருக்கிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன்புதான் ஜாமீனில் ஜெயிலில் இருந்து வெளியே வந்துள்ளார். காலையில் மது அருந்திவிட்டு, நிதானம் இல்லாமல் தான் இருந்திருக்கிறார், தொடர்ந்து காவல்துறையினர் அவரிடம் விசாரணை செய்து வருகிறார்கள்.

அவர் மொத்தம் 4 பாட்டில் எடுத்து வந்துள்ளார் அதில் ஒரு பாட்டிலை தான் வீசி இருக்கிறார் அதிலும் நெருப்பு வரவில்லை, அவர் நடந்து வந்து உள்ளார், கருக்கா வினோத் மீது 7-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது, அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது, குடியரசு தலைவர் நாளை வர உள்ள நிலையில்  எந்த பாதுகாப்பு குறைபாடும் இல்லை என்று தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com