உதவி தொகை வேண்டுமா? கொஞ்சம் செலவாகும், பரவாயில்லையா?

உதவி தொகை வேண்டுமா? கொஞ்சம் செலவாகும், பரவாயில்லையா?
Published on
Updated on
1 min read

சேலம்: வங்கி கணக்கில் அரசு வரவு வைத்த தொகையை பயனாளரிடம் எடுத்து தர தலா 50 ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளார் காசாளர்

தமிழகத்தில் வயது முதிர்வின் காரணமாக, உழைத்து வருவாய் ஈட்டி வாழ முடியாமலும், உறவினர்களின் ஆதரவற்ற நிலையிலும் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு, தமிழக அரசு மாதந்தோறும் முதியோர் உதவித்தொகை வழங்கி வருகிறது.

அதன்படி சேலம் மாநகர் சாமிநாதபுரம் பகுதியைச் சேர்ந்த முதியோர்களுக்கு அருகே உள்ள சத்திரம் பகுதியில் செயல்பட்டு வரும் கனரா வங்கி மூலம் முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வங்கியில் காசாளராக பணியாற்றும் உஷா என்பவர் முதியோர்களின் வங்கி கணக்கில் அரசு வரவு வைத்த தொகையை பயனாளரிடம் எடுத்து தர தலா 50 ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளார். இதை அவர் தொடர்ந்து செய்த்து வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. 

அங்கு, தனது உதவித்தொகையை வாங்க வந்திருந்த பெண் ஒருவரிடம், " என்னது இது? மீதி 30ரூ தாருங்கள். போன மாதமும் இதே தான் செய்தீர்கள், இந்த மாதமும் 20ரூ தான் தருகிறீர்கள்" என ஆதங்கத்துடன் கேட்பது காணொளியில் பதிவாகியுள்ளது. 

அதே போல், உதவி தொகை வாங்க வந்த மற்ற பெண்களும் கையில் பணத்தை வைத்துக்கொண்டு, உஷாவிடம் நீட்டுவதை காணொளியில் காண முடிகிறது. இதையெல்லாம், அந்த பகுதி வாலிபர்கள், காணொளியாக பதிவு செய்து, இணையத்தில் பரவவிட்ட நிலையில், காசாளர் உஷா மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா என எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com