தொடரும் சாதி வன்மம் ..! இளைஞர்கள் மீது சிறுநீர் கழித்து கொடூர தாக்குதல்..!

தொடரும் சாதி வன்மம் ..! இளைஞர்கள் மீது சிறுநீர் கழித்து கொடூர தாக்குதல்..!

நெல்லை மாவட்டம் மணிமுத்தீஸ்வரம் அருகே அட்டவணைப் பிரிவு இளைஞர்கள் மீது சிறுநீர் கழித்து மானபங்கப்படுத்தி தாக்குதல் நடத்திய 6 பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர். 

திருநெல்வேலி மாநகரத்திற்கு உட்பட்ட மணிமூர்த்தீஸ்வரம் ஆற்றுப்பகுதியில் கஞ்சா போதையில்  பட்டியல் பிரிவு இளைஞர்கள் இரண்டு பேரை நிர்வாணப்படுத்தி  சிறுநீர் கழித்து தாக்கிய கும்பல் கைது. 

திருநெல்வேலி அடுத்த மணிமூரத்தீஸ்வரம் ஆற்றுப்பகுதியில், கடந்த 30ஆம் தேதி மாலை வேளையில் ஒரு கும்பல்  மது அருந்திக்கொண்டிருத்தனர். அப்போது அவர்கள் கஞ்சா போதையில்  அங்கு வந்த பட்டியல் பிரிவு இளைஞர்களை வழிமறித்து, ஜாதியைக் கேட்டு தெரிந்து கொண்டு நிர்வாணப்படுத்தி அவர்கள் மீது சிறுநீர் கழித்துள்ளனர். 

மாலையிலிருந்து நள்ளிரவு வரை நிர்வாணப்படுத்தி தாக்கியதாக அந்த இளைஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.   கொடூரமாக தாக்கப்பட்ட மனோஜ் மற்றும் மாரியப்பன் படுகாயங்களோடு இரண்டு இளைஞர்களும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிகக்கப்பட்டுள்ளனர். 

இதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த திருநெல்வேலி மாநகர் தச்சநல்லூர் காவல்துறையினர், வன்கொடுமை வழக்கு, வழிபறி கொள்ளை, ஆயுதங்களால் தாக்குதல்,  அவமானப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து  ஆறு பேரை கைது செய்துள்ளனர். 

ஆயுதங்களோடு சுற்றிய  பொன்மணி (25) , நல்லமுத்து (21),  சிவா(22), ராமர்(22),  லட்சுமணன் (20)  ஆயிரம்(19),  ஆகிய ஐந்து பேர் கொண்ட அந்த  கும்பல் கொலை திட்டத்தோடு மாநகருக்குள் வந்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

மேலும், மாநகர நுண்ணறிவு பிரிவு முறையாக கண்காணிப்புகளை மேற்கொள்ள மனு அளிக்கப்பட்டது.  தென் மாவட்டங்களில் நடைபெறும் தொடர் ஜாதிய வன்முறைகள் தடுத்திடவும் வழியுறுத்தபட்டது. 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com