நீலகிரி அருகே கொரோனா நோயாளிகள் ஆம்புலன்ஸில் ஏற மறுத்து சுகாதார ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியது.
கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா உப்பட்டியை அடுத்த மேஸ்திரி குன்னு பகுதியில் வசித்து வரும் நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அங்கு சென்ற சுகாதாரப்பணியாளர்கள், பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க அழைத்து வர சென்றிருந்தனர். அப்போது அங்கிருந்த கொரோனா நோயாளி சுகாதாரப்பணியாளர்களுடன் வர மறுப்பு தகாதவார்த்தைகளால் காவலர் முன்னே திட்டி சண்டையிட்டுள்ளனர். மேலும் தனிமை சிகிச்சைக்கு வர முடியாது என கூறி சுகாதாரப்பணியாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசி உள்ளனர்.
இச்சம்பவம் குறித்து விசாரித்த போலீசார் அப்பகுதியை சேர்ந்த 6 பேர் மீது வழக்குபதிவு செய்தனர். கொரோனா நோயாளி சுகாதத்துறைப்பணியாளர்களிடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது.