6 முறை கருக்கலைப்பு..? நடிகை விஜயலெட்சுமியிடம் 4 பேர் கொண்ட மருத்துவர் குழு பரிசோதனை...!

6 முறை கருக்கலைப்பு..?  நடிகை விஜயலெட்சுமியிடம்   4 பேர் கொண்ட மருத்துவர் குழு பரிசோதனை...!
நடிகை விஜயலட்சுமியிடம் 4 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு மருத்துவ பரிசோதனை செய்தனர்.
நடிகை விஜயலட்சுமி,    தன்னை  நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக கூறி அவர் மீது  கடந்த 28 -ஆம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.
அந்த புகாரில், கடந்த 2011 ஆம் ஆண்டு தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாகவும் அதனால் 6 முறை கருக்கலைப்பு செய்ததாகவும் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். அந்த புகாரின் பேரில் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. பின்னர் சமாதனத்தின் பேரில் சீமான் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டாம் என தானே எழுதி கொடுத்தேன்.
தற்போது அந்த வழக்கு தொடர்பாக  நடவடிக்கை தேவை என காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதனை அடுத்து இரு முறை விஜயலட்சுமியிடம் காவல் துணை ஆணையர் உமையாள் விசாரணை நடத்தினார். பின் திருவள்ளூரில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் விஜயலட்சுமி வாக்குமூலம் அளித்தார். அப்போது வழக்கு சம்பந்தமான ஆவணங்கள், புகைப்படங்கள் ஆகியவற்றையும் நீதிபதியிடம் சமர்ப்பித்ததாக கூறப்படுகிறது.
போலீசார் இதன் அடுத்த கட்டமாக விஜயலட்சுமியை மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் இன்று 4 பேர் கொண்ட மகப்பேறு மருத்துவர்கள் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். விஜயலட்சுமி தன்னை 6 முறைக்கு மேல் தன்னை பலவந்தமாக கருக்கலைப்பு செய்ய வைத்தாக புகாரில் குறிப்பிட்டிருந்தார். அதன் அடிப்படையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த பரிசோதனை தொடர்பான தகவல்கள் மற்றும் மருத்துவர்களின் அறிக்கையின் அடிப்படையில் சீமான் மீதான புகாரில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.
logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com