தென்காசி: ஆலங்குளம் அருகே உள்ள குருவன்கோட்டையை சேர்ந்தவர் அண்ணாவி காய்கறி வியாபாரி. இவர் பைக்கில் காய்கறிகளை ஏற்றி கொண்டு ஊர் ஊராக சென்று விற்பனை செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, வெள்ளாளங்குளம் என்ற ஊரில் வியாபாரம் செய்ய சென்றுள்ளார்.
அப்போது பெட்டியில் இருந்து தக்காளி ஒன்று தவறி விழுந்துள்ளது. அதை தெருவில் இருந்த நாய் பாய்ந்து எடுத்து சாப்பிட்டது. இதனையடுத்து அந்த நாய்க்கு 2 கிலோ தக்காளி போட்டுள்ளார். அதை பாய்ந்து பாய்ந்து சாப்பிடும் அந்த காட்சியை தன் சட்டை பையில் செல்போனை பதிவு செய்துள்ளார்.
பொதுவாக நாய்கள் தக்காளி சாப்பிடாது என்பதால் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.