”  என் கூட என்வீட்டில் சாப்பிடுவார்,.. நல்ல மனிதர்; எதார்த்தமான நடிகர்” - சங்கர் கணேஷ் இரங்கல்

”  என் கூட என்வீட்டில் சாப்பிடுவார்,.. நல்ல மனிதர்;  எதார்த்தமான நடிகர்” -  சங்கர் கணேஷ் இரங்கல்

மறைந்த திரைப்பட இயக்குநர் மற்றும் குணச்சித்திர நடிகர் மாரிமுத்து இன்று காலை திடீரென மாரடைப்பால் காலமானார்.  அவரது இழப்பிற்கு பல திரைத்துறை  பிரபலங்களும் அரசியல்வாதிகளும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், இசையமைப்பாளர் சங்கர் கணேஷ்  தனது இரங்கலை தெரிவித்தார். அவர் கூறியதாவது:- 

” 80-86 ஆம் ஆண்டுகளிலேயே மாரிமுத்துவை எனக்குத் தெரியும் அப்போது துணை இயக்குனராக இருந்தார் , நல்ல மனிதன் , நல்ல நடிகர். இயற்கையாக நடிப்பவர் , என்னுடைய  மகன் ஸ்ரீ.   வெள்ளித்திரையில் அவருக்கு நல்ல பெயர் உள்ளது . அனைவருக்கும் அவர் மீது ஒரு நல்ல அபிப்பிராயம் உள்ளது. 

 என் கூட என் வீட்டில் சாப்பிடுவார். நல்ல மனிதர். நல்ல நடிகர். எதார்த்தமான நடிகர். எங்கள் அண்ணனால் தான் இன்று நன்றாக இருக்கிறேன் என்று என் பையனிடம் பழகுவார். சீரியலில் நல்லா நடித்திருக்கிறார். வெள்ளித்திரையில் அவருக்கு நல்ல பேர் இருக்கிறது. அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்”, என தெரிவித்தார்.

இதையும் படிக்க  | ”இந்தாம்மா ஏய்” என்ற வசனத்தின் மூலம் பிரபலமானவர்...!