பிரபல தமிழ் திரைபட இயக்குநர் மனோபாலா காலமானார்....!

பிரபல தமிழ் திரைபட இயக்குநர் மனோபாலா காலமானார்....!

தமிழ்  சினிமாவின் பேசப்படும்  திரைப்பட இயக்குநர்களில் ஒருவர் மனோபாலா. இவருக்கு தற்போது 69 வயதாகிறது. மனோபாலா 40 திரைப்படங்களையும், 16 தொலைக்காட்சித் தொடர்களையும் 3 தொலைக்காட்சித் திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.

இவர், கடந்த சில நாட்களாக உடல்நலக்  குறைவு காரணமாக மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று திடீரென அதிகமான நெஞ்சுவலி ஏற்பட்டதால் காலமானார். 

தமிழ் திரை உலகில், திரைப்பட இயக்குநர் , தயாரிப்பாளர், நகைச்சுவை நடிகர் என பன்முகக் கலைஞராக தனக்கென ஒரு தனி அடையாளத்தையே ஏற்படுத்திக் கொண்டவர். இவரது படைப்புகள் திரைத்துறை வட்டாரத்தில் பெரிதும் பேசப்பட்டன. இவர் இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராகப்  பணியாற்றினார்.  பின் ஆகாய கங்கை என்னும் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் ஒரு இயக்குநராக அவதாரம் எடுத்தார். மேலும், ஊர்காவலன், பிள்ளைநிலா, சிறைப்பறவை போன்ற படங்களையும்  இயக்கியுள்ளார். 

1994ல் தாய்மாமன் என்ற படத்தில் தாய் மாமன் என்ற படத்தில் அறிமுகமான இவர்,  சுமார்  100 -க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராகவும் நடித்திருக்கிறார். இயக்குனராக இவருக்கு பல்லவேறு பெருமைகள் இருந்தாலும், ஒரு தயாரிப்பாளராக இவருக்கு பெரும் புகழைத் தேடிக் கொடுத்த திரைப்படம் 
'சதுரங்க வேட்டை' என்பது குறிப்பிடத்தக்கது.  

அவருக்கு ஏற்கனவே கல்லீரல் பிரச்சனை இருந்தது. இந்த கல்லீரல் பிரச்சனை காரணமாக அவர் சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கே சிகிச்சை முடித்த அவரை வீட்டில் ஓய்வு எடுக்கும்படி மருத்துவர்கள் பரிந்துரைத்து  உள்ளனர். அவருக்கு கல்லீரல் பிரச்சனையோடு கடந்த சில நாட்களாக கடுமையான நெஞ்சு வலியும் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அவரால் மூச்சு விட முடியாமல் திணறி உள்ளார்.  ஜனவரி மாதம் மனோபாலாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இன்று தனது வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் போது திடீரென அதிகமான  நெஞ்சுவலி ஏற்பட்டதால் மரணமடைந்தார். 

தமிழ் துறையில்  அவரின் பங்கு அளவுக்கறியது. எல்லோருடனும் அன்புடனும், நட்புடனும் பழகும், இளகிய மனமும் மென்மையான குணமும்  கொண்ட மனோபாலாவின்  மரணம் தமிழ்த் திரை உலகில் பலருக்கும் பேரதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com