“ஆளுநர் மாளிகையில் குண்டு வீச்சு: சட்டம்- ஒழுங்கு சந்தி சிரிக்கிறது” - மத்திய அமைச்சர் எல்.முருகன்

“ஆளுநர் மாளிகையில்  குண்டு வீச்சு: சட்டம்- ஒழுங்கு சந்தி சிரிக்கிறது” - மத்திய அமைச்சர் எல்.முருகன்

ஆளுநர் மாளிகையின் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தின் மூலம் தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், தமிழ்நாட்டில் ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது என்றும், இதனால், பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது என்றும் கூறீனார்.

முற்றுலும் தோற்றுபோன அரசாக தமிழ்நாடு அரசு உள்ளது என்றும், குற்றவாளியின் பின்னணியை காவல்துறையினர் கண்டறிய வேண்டும் எனௌம் கூறினார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com