ரவுடி பேபி சூர்யாவை கிழித்தெடுத்த ஜி.பி.முத்து..! மருந்து குடித்து சாகும்படி ஆவேசம்..!
ரவுடி பேபி சூர்யாவை திட்டித் தீர்த்த ஜி.பி.முத்து..!

மேட்டுப்பாளையத்தில் நடைபெற்று வரும் தனியார் பொருட்காட்சியில் குழந்தைகள் சாப்பிடும் அப்பளத்தின் மீது நடக்கும் இளைஞர் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
திருவிழாக்களில் விற்கப்படும் பெரிய வகை அப்பளங்கள் அனைவரையும் ஈர்க்கக் கூடியவை. இதற்கு டெல்லி அப்பளம் என பெயரும் உண்டு. அதுவும் குழந்தைளுக்கு இதுபோன்ற பெரிய வகை அப்பளம் என்றால் மிகவும் விருப்பம். அதனால் அதனை வாங்கித் தருமாறு தங்களது பெற்றோரிடம் அடம் பிடிக்கும் குழந்தைகள் ஏராளம் . ஆனால் கோவையில் ஒருவர் இந்த அப்பளத்தை காய வைப்பதை பார்த்தால் இனி இந்த அப்பளத்தை வாழ்நாளில் உண்ணவே மாட்டீர்கள். அப்படி ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் -கோவை சாலையில் ஐயப்பன் கோயில் அருகே தனியார் நிறுவனம் சார்பில் பொருட்காட்சி கடந்த ஒரு வார காலமாக நடைபெற்று வருகிறது. இந்த பொருட்காட்சியில் விற்கப்படும் அப்பளத்தை ஒருவர் காய வைக்கும் காணொளி சமீபத்தில் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அந்த காணொளியில் அப்பளத்தை காய வைப்பதற்காக தரை மீது போடும் விரிப்பின் ஒருவர் ஈரமான அப்பளத்தை காயவைக்கிறார். அது மட்டுமின்றி பரவலாக காய வைக்கப்பட்ட அப்பளங்களின் மீதே நடந்து வந்து அந்த இளைஞர் அப்பளத்தை திருப்பியும் போடுகிறார். இதனை தூரத்தில் இருந்து பார்த்த நபர் இதனை கைபேசியில் பதிவிட்டு சமூக வலைதளத்தில் பதிவேற்றியுள்ளார்.
https://www.youtube.com/embed/54oWD2a-WLc?si=LLpJetbfqADRQ1-5
இந்த காணொளியை பார்க்கும் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அனைவரும் சாப்பிடும் உணவுப்பொருட்களை இப்படி சுகாதாரமற்ற முறையிலும் பொறுப்பற்ற முறையிலும் தயாரிக்கும் இவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், மாவட்ட நிர்வாகமும், மேட்டுப்பாளையம் நகராட்சி நிர்வாகம் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேட்டுப்பாளையம் பகுதி சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதையும் படிக்க: "நீதிமன்றம் ஒன்று சொன்னால் உங்கள் போக்கில் ஒன்று செய்கிறீர்கள்" நீதிபதிகள் அதிருப்தி!
"பிரதமர் சிஏஜி அறிக்கைக்கு நிச்சயம் பதில் சொல்வார்" என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சொளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி - சென்னை வந்தே பாரத் ரயில் சேவையை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொளிக் காட்சி வாயிலாக காலை 11:30 மணியளவில் திருநெல்வேலி ரயில் நிலையத்தில் தொடங்கி வைக்க இருக்கிறார்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் இருந்து தூத்துக்குடி விமான நிலையம் வருகை தந்தார்.
தூத்துக்குடி விமான நிலையம் வருகை தந்த அவர் காவல்துறையினரின் வரவேற்பை ஏற்றுக்கொண்டார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், பல முன்னேற்றங்களை நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது. 33 சதவிகீதம் இட ஒதுக்கீடு கவலை அளிக்க கூடியது இல்லை. ஆனால் இங்கு இருக்கக் கூடியவர்களுக்கு அது கவலை அளிக்கிறது. காரணம் என்னவென்றால் நாடு வேகமாக முன்னேறுகிறது. அதைப் பற்றி தவறு சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக மோடி 9 ஆண்டுகாலம் எதையுமே செய்யவில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் எனக் கூறினார்.
கடுமையான குடிநீர் பஞ்சம் தென் பகுதியில் ஏற்பட்டுள்ளது. சபாநாயகர் தொகுதியில் தண்ணீர் பஞ்சம் இருக்கிறது என கேள்விப்பட்டேன். வீடு தோறும் குடிநீர் கொண்டு வர வேண்டும் என்பதற்காக ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தை பிரதமர் மோடி கொண்டு வந்து இருக்கிறார். மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களை மாநில அரசு செயல்படுத்தி மக்களுக்கு செயல்பட வைக்க வேண்டும்.
அமைச்சர் கீதாஜீவன் "33 சதவிகித இட ஒதுக்கீடு வரும் ஆனா வராது" என்று நேற்று கூறினார். அது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு? மகளிர் இட ஒதுக்கீடு 33% எங்களை பொறுத்த அளவிற்கும் வரும். அவர்களை பொறுத்த அளவிற்கு வராது. அவர்கள் எதிர்மறையாக சிந்திக்கிறார்கள். வராது என்று சொல்லிக் கொண்டிருந்தால் பாராளுமன்றத்திலும் இதுதான் அவர்களுடைய மனநிலை, அவர்கள் வரவேண்டாம் என்று நினைத்தார்கள். முன்னர் கூட்டணி ஆட்சியில் அதிக பெரும்பான்மையாக இருந்தார்கள். ஆனால் கொண்டும் வர முடியவில்லை. தற்போது பிரதமர் மோடி ஆட்சியில் கொண்டு வரப்படுகிறது.
கணக்கெடுத்து 2028 அல்லது 29ல் வரும். இதற்கு முன்னர் வருமா? வராதா என்றனர். ஒரு பெண்ணாக இருந்து கொண்டு அவர்கள் இப்படி பேச கூடாது. 33 % இட ஒதுக்கீடு பல பெண்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. மற்ற பெண்களுக்கு இட ஒதுக்கீடு ஒதுக்கும்போது அவர்களுக்கு எப்படி பிடிக்கும். அரசியலில் இருப்பதற்கு வாய்ப்புகள் கிடைக்கிறதே என்று பெண்ணாக இருந்து முதலில் வரவேற்போம். அதற்கு அப்புறம் விமர்சிப்போம். இதுதான் இங்கு உள்ள பிரச்சனையாக உள்ளது. நல்லது செய்தாலும் வரவேற்பது கிடையாது. இது மிகப்பெரிய சமுதாயப் புரட்சி 13 பேர் பாராளுமன்றத்தில் உறுப்பினராகவும், 77 பேர் சட்டமன்றத்தில் உறுப்பினராகவும் இருக்க போகிறார்கள். சிறிய மாநிலம் புதுச்சேரியில் 13 பெண் எம்எல்ஏக்கள் உட்காரப் போகிறார்கள். என்னதான் விமர்சனம் செய்தாலும் நன்றியை சொல்லிக் கொள்கிறோம்
காவிரி நீர் குறித்து பேசுகையில்? காவிரி நீர் வரும் ஆனால் வராது. தற்போது கூட்டணியில் தானே உள்ளனர். பேச்சுவார்த்தை நடத்தி கொண்டுவர வேண்டியது தானே, ஒன்பது வருடமாக நாடு பொருளாதாரத்தில் முன்னேறி உள்ளது. சென்னையில் இசை கச்சேரியை இவர்களால் கட்டுப்படுத்தப்படுத்த முடியவில்லை. ஆனால் டெல்லியில் மிகச் சிறப்பாக ஜி 20 மாநாடு நடத்தினோம்.
சிஏஜி அறிக்கை பற்றி பேசுகையில், 2015 இல் ஒரு திட்டம் கொண்டு வரப்பட்டல் 2023 முடிவடையும். திட்டம் என்று வரும் போது எட்டு வருடம் ஆகும். இது தான் எதார்த்தமான உண்மை. உலகத்துக்கே தெரியும் மோடி ஊழல் இல்லாத ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார் என்று அவர் கூறினார்.
இதையும் படிக்க: தயார் நிலையில் 24 மணிநேர காய்ச்சல் சிகிச்சைப் பிரிவு!
சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த கார் டிரைவர் ராஜ்குமார் என்பவரது வங்கிக் கணக்கில் 9000 கோடி ரூபாய் பணம் டெபாசிட் ஆனதால் அதிர்ச்சி..
பழனி நெய்க்காரப்பட்டி சேர்ந்த ராஜ்குமார் கோடம்பாக்கத்தில் நண்பர் அருகில் தங்கி வாடகை கார் ஓட்டி வருகிறார் கடந்த செப்டம்பர் 9 -ஆம் தேதி மாலை 3 மணி அளவில் காரில் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில் ராஜ்குமாரின் வங்கிக் கணக்கிற்கு தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் இருந்து ஒன்பதாயிரம் கோடி ரூபாய் டெபாசிட் ஆனதாக குறுஞ்செய்தி வந்தது. முதற்கட்டமாக ராஜ்குமார் அதில் எத்தனை பூஜ்ஜியங்கள் உள்ளது என்பதை முடியாமல் எவ்வளவு பணம் வந்துள்ளது என குழம்பி இருந்தார்.
அதன் பின் தனது வங்கிக் கணக்கில் வெறும் 105 ரூபாய் இருக்கும் நிலையில் யாரோ தன்னை ஏமாற்ற முயல்கிறார்கள் என நினைத்துள்ளார். இதனையடுத்து, தனது வங்கிக் கணக்கில் இருந்து நண்பருக்கு 21,000 பணம் அனுப்பிய பிறகு 9 ஆயிரம் கோடி ரூபாய் பணம் தன் வங்கிக் கணக்கிற்கு வந்ததை அறிந்து பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
நிலையில் நண்பருக்கு 21 ஆயிரம் ரூபாய் பணம் பகிர்ந்த உடனேயே மீதமுள்ள பணம் அனைத்தையும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளது.
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் தலைமை அலுவலகம் இருக்கும் தூத்துக்குடியில் இருந்து ராஜ்குமாருக்கு தொலைபேசி மூலம் அழைத்து ஒன்பதாயிரம் கோடி ரூபாய் பணம் தவறுதலாக டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதிலிருந்து பகிரப்பட்ட பணத்தை செலவு செய்ய வேண்டாம் என வங்கி நிர்வாகம் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. இதனையடுத்து நிர்வாகம் தரப்பில் ராஜ்குமாரை திடீரென மிரட்ட ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து சென்னை தியாகராய நகரில் உள்ள தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் கிளைக்கு வங்கி தரப்பில் இருந்தும் டிரைவர் ராஜ்குமார் தரப்பில் இருந்தும் வழக்கறிஞர்கள் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பின்னர், 9000 கோடி ரூபாய் பணத்தில் இருந்து பரிவர்த்தனை செய்யப்பட்ட 21,000 பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டாம் எனவும், அதற்கு பதிலாக வாகன கடன் வழங்குவதாக வங்கி தரப்பிலிருந்து சமரசம் பேசி அனுப்பி வைத்ததாக தெரிவித்துள்ளார்.
வாடகை கார் ஓட்டுநர் வங்கிக் கணக்கில் ஒன்பதாயிரம் கோடி ரூபாய் திடீரென டெபாசிட் ஆன சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிக்க | தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் மக்கள் அவதி ..!
தமிழ் சினிமாவின் முன்னனி இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் மன அழுத்தம் காரணமாக இன்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணத்தைத் தொடர்ந்து, தற்போது திரைத்துறை பிரபலங்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
இசையமைப்பாளர் மற்றும் அவரது மனைவிக்கும் குடும்பத்திற்கும் ஆறுதல் கூறியும் வருகிறார்கள். அந்த வகையில் முன்னனி நடிகர்களான சிம்பு, கார்த்தி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் சந்தானம், நடிகை குஷ்பூ , இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா , இயக்குநர் பாரதிராஜா என பலர் வருகை தந்து தங்களது இரங்கல்களைப் பதிவு செய்தனர்.
தொடர்ந்து, நடிகர்கள் சத்தியராஜ் மற்றும் பார்த்திபன் தங்களது உணர்வுபூர்வமான இரங்கல்களை ப்திவு செய்தனர்.
நடிகர் பார்த்திபன் இரங்கல்:-
குழந்தைகள் கல்யாணம் ஆகி பிரிந்து செல்வது பெற்றோர்களால் தாங்க முடியாது. இந்த இழப்பை எவ்வாறு அவர் தாங்கிக் கொள்வார் என்று தெரியவில்லை பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை குறைத்துவிட்டு நேரடியாக குழந்தைகளை கண்காணிக்கலாமே...! என கூறினார். பெற்றோர்களை விட ஆசிரியர்களே அதிக நேரம் குழந்தைகளை கண்காணிப்பதால் இந்த கோரிக்கையை வைத்திருப்பதாக அவர் கூறினார்.
நடிகர் சத்யராஜ் இரங்கல் :-
அன்பு தம்பி விஜய் ஆண்டனிக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன், இதைவிட ஒரு துயரமான சம்பவம் ஒரு மனிதனுக்கு நடக்கக் கூடாது, ஆறுதல் கூற வார்த்தை இல்லாத ஒரு நிலையில் இருக்கிறேன், விஜய் ஆண்டனி தைரியமாக இருக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் இரங்கல் :-
இந்த செய்தியை கேட்டவுடன் மனசு மிகவும் வேதனை அடைந்தது . ஒரு நிமிடத்தில் எதையும் யோசிக்காமல் எடுத்த முடிவு எல்லோரையும் பாதிக்கிறது.
வருங்காலத்தில் இதுபோன்று யாரும் தவறான முடிவு எடுக்கக் கூடாது. இது போன்ற தவறான முடிவுகள் பெற்றோருக்கு செய்யக்கூடிய பாவம். தவித்துக் கொண்டிருக்கும் குடும்பத்திற்கு என்னுடைய ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.
இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இரங்கல் :-
சினிமா துறையை தாண்டி விஜய் ஆண்டனி ஒரு நல்ல மனிதர்.இந்த செய்தி என்னை மிகவும் பாதிப்படைய வைத்துள்ளது. இவ்வளவு சிறிய வயதிலேயே இந்த விபரீத முடிவு ஏன் எடுத்தார்கள் என தெரியவில்லை.
எந்த தவறான முடிவு எடுப்பதற்கு முன், நாம் பெற்றோர்களை நினைத்து பார்க்க வேண்டும். அவர்கள் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
நடிகரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளுமான விக்ரமன் இரங்கல் :-
தற்கொலை எதற்கும் தீர்வாகாது... இந்த முடிவை அவர் ஏன் எடுத்தார் என தெரியவில்லை. விஜய் ஆண்டனி நல்ல மனிதர் எல்லோரிடமும் அன்புடன் பழகுபவர். இந்த இழப்பு அவருக்கு மிகப் பெரிய இழப்பாகும்.
தென்காசி மாவட்டம் சங்கரன் கோயில் சங்கரநாராயண சாமி கோயில் யானை கோமதி, பூ விற்கும் பெண்ணிடம் தனக்கு பூ கேட்டு குறும்பு செய்ததை பக்தர்கள் ஆர்வமுடன் பார்த்துச் சென்றனர்.
ஃபுட்பால் விளையாடுவது, மௌத்தார்க்கன் வாசிப்பது, சத்தம் எழக்கூடிய பொருட்களில் தாளமிட்டு மகிழ்வது, மழையின் போது துள்ளி குதித்து விளையாடுவது என பல்வேறு குறும்புத்தனங்கள் செய்து பக்தர்கள் மத்தியில் பிரபலமான யானையாக, பெண்யானை கோமதி இருந்து வருகிறது
இந்த நிலையில் நேற்று விநாயகர் சதுர்த்தி என்பதால் விநாயகர் ஊர்வலத்திற்காக சப்பரத்தின் முன்பாக வீதி உலா செல்வதற்கு யானை கோமதி கோவிலை விட்டு வெளியே வந்தது. அப்போது கோவில் வாசலில் பூக்களை கட்டி தட்டில் வைத்து விற்பனை செய்யும் பூக்காரப் பெண்ணை கண்டதும் அப்படியே நின்று தனக்கும் பூ வேண்டும் என்ற தோணியில் பூக்காரப் பெண்ணை பார்த்து தும்பிக்கையை உயர்த்தி பூ வேண்டும் என்ற தோணியில் பூ கேட்டது.
இதை அறிந்து கொண்ட அந்த பூக்கார பெண்ணும் உடனடியாக தனது பூத்தட்டில் இருந்த மல்லிகை பூவை எடுத்து யானை கோமதி இடம் கொடுத்தார். அதை லாபகமாக தும்பிக்கையால் வாங்கிக் கொண்ட யானை கோமதி தலையை ஆட்டியவாறு தனக்கு அந்த பூவை சூட்டிவிடுமாறு பூக்கார பெண்ணிடம் சைகை காட்டியது.
உடனடியாக பூக்கார பெண்ணும் பூவை யானைக்கு சூட்டி விடுவதற்கு தயாரானார். யானை பாகனின் கட்டளைக்கு ஏற்று இரண்டு முன்னங் கால்களையும் மடக்கி லாவகமாக அமர்ந்து கொடுத்து தனது நெற்றியில் உள்ள முடியின் நடுப்பகுதியில் பூவை வைத்து விடுமாறு யானை கோமதி சினுங்களுடன் அமர்ந்தது.
இதனை அடுத்து அந்தப் பெண்ணும் பூக்கள் கொண்டு யானை கோமதியை அலங்காரம் செய்ய துவங்கினார். உதவியாக யானையின் இரண்டாவது பாகணும் சேர்ந்து கொண்டார். ஒவ்வொரு முறை பூ வைத்து விடும் போதும் பூ வைத்து விடுவதற்கு ஏதுவாக யானை கோமதி தன் முன்னங்கால்களை மடக்கி வளைத்துக் கொடுத்து பூ வைப்பதற்கு தகுந்தாற்போல் தன் முகத்தை கீழ் நோக்கி இறக்கி அந்தப் பெண்ணின் உயரத்திற்கு தகுந்தார் போல் வளைந்து கொடுத்தது.
அந்தப் பெண்ணும் தன்னிடம் இருந்த பூக்கூடையிலிருந்து மல்லிகைப்பூ கனகாம்பரம் ரோசாப்பூ உள்ளிட்ட பூக்களை எடுத்து யானை கோமதியை அலங்காரம் செய்தார். அலங்காரம் முடிந்தவுடன் இப்போதுதான் உன்னை பார்க்க சூப்பராக இருக்கிறது என்று கூறி அந்தப் பெண் யானை கோமதிக்கு திருஷ்டி சுற்றும்போது தனது கைகளை கொண்டு திருஷ்டி சுற்றினார்.
தொடர்ந்து அலங்காரம் முடிந்தவுடன் யானை கோமதி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக தலையை ஆட்டி தும்பிக்கையை உயர்த்தி குதூகளித்த காட்சி அங்கு இருந்த அனைவரையும் அதிசயத்தில் ஆழ்த்தியது.
ஆறறிவு ஜீவன்களாகிய பெண்களுக்கு பூ என்பது இஷ்டப்பட்ட பொருளாக இருக்கும் நிலையில் ஐந்தறிவு ஜீவனான யானை கோமதி பூ கேட்டு அடம்பிடித்து பூக்கார பெண் முன்பு நின்று பூவை சூடிக்கொண்ட சம்பவம் அங்கிருந்த பக்தர்களை வெகுவாக கவர்ந்து இழுத்தது.
இதையும் படிக்க || அச்சுறுத்தும் வகையில் வாகனம் ஓட்டியதால் டிடிஎப் வாசன் கைது!!