வரதட்சிணையா கேட்கிறாய்?: மணமகனை மரத்தில் கட்டிய பெண் வீட்டார்!

வரதட்சிணையா கேட்கிறாய்?: மணமகனை மரத்தில் கட்டிய பெண் வீட்டார்!
Published on
Updated on
1 min read

உத்தரபிரதேசம்: உத்தரபிரதேசத்தில், கூடுதலாக வரதட்சிணை கேட்ட மணமகனை, மரத்தில் கட்டி வைத்துள்ளனர், மணமகள் வீட்டார்.

உத்தரபிரதேசத்தில் வரதட்சிணை கேட்ட மணமகனை, மரத்தில் கட்டி வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. உத்தரபிரதேசத்தில் உள்ள பிரதாப்கரில் அமர்ஜீத் வர்மா என்பவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில், மாலை மாற்றும் நிகழ்ச்சியில், அமர்ஜீத்தின் நண்பர்கள் தவறாக நடந்துகொண்டதாக அறியப்படுகிறது. 

அமர்ஜீத்தின் நண்பர்களின் நடவடிக்கைகளை, மணமகள் வீட்டார் தட்டி கேட்டுள்ளார்கள். இதனால் ஆத்திரமடைந்த மணமகன் வீட்டார், தங்கள் மகளை கல்யாணம் செய்துகொள்ள வேண்டுமானால், கூடுதலாக வரதட்சிணை வேண்டும் என கூறியுள்ளனர். 

இதில் பெண்வீட்டாருக்கு உடன்பாடு இல்லாத நிலையில், காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துவிட்டு, மணமகன் அமர்ஜீத்தையும், மரத்தில் கட்டி வைத்துள்ளனர். பின்பு, காவலர்கள் வந்தவுடன், அமர்ஜீத்தை மீது காவல் நிலையம் அழைத்து சென்றனர். இரு வீட்டாருடான் பேச்சுவார்த்தையில் எட்டுப்பட்டுள்ளார். 

அதிக வரதட்சிணை கேட்ட மணமகனை, மரத்தில் கட்டி வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தாலும், இது குறித்து சமூக வலைத்தளங்களில், இணையவாசிகள் பாராட்டி வருகினறனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com