"கேரளாவில் தாக்கப்பட்ட வடமாநில தொழிலாளர்" வீடியோ வைரல்!

"கேரளாவில் தாக்கப்பட்ட வடமாநில தொழிலாளர்" வீடியோ வைரல்!

கேரளாவில் நான்கு மாதம் சம்பளம் வழங்காமல் இருப்பது குறித்து புகார் அளித்த வெளிமாநில தொழிலாளரை கம்பெனியின் மேலாளர் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பையனூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை துறையின் சார்பாக சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிக்காக வெளி மாநிலத் தொழிலாளர்கள் ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர். ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் கட்டுமான நிறுவனம் சார்பாக இந்த சாலை பணிக்காக ஒப்பந்தம் எடுத்துள்ளது.

இந்த நிலையில் இங்கு பணியாற்றும் வெளி மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்களுக்கு கடந்த நான்கு மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து வெளிமாநில தொழிலாளர் ஒருவர் ஒப்பந்த நிறுவனத்தின் தலைமை நிலையத்திற்கு புகார் அனுப்பி இருந்தார்.

இந்தப் புகார் குறித்து தகவல் அறிந்த பையனூரில் செயல்பட்டு வரும் ஒப்பந்த நிறுவனத்தின் மனித வளத்துறை அதிகாரி புகார் கூறிய வெளிமாநில தொழிலாளியை காலால் எட்டி மிதித்தும் கன்னத்தில் அறைந்தும் கட்டையினால் கொடுமையாக தாக்கியுள்ள மேலும் அவர் சம்பந்தப்பட்ட மேலாளரின் காலை பிடித்து கெஞ்சியும் அவர் தாக்குதலை நிறுத்தவில்லை இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படவில்லை என்ற போதிலும் சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கும் என பலர் தங்களின் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

இதையும் படிக்க:"பாலியல் தொழில் குற்றமில்லை" நீதி மன்றம் அதிரடி!