அமைச்சர் வீடுகளில் தொடர்ந்து ரைட் நடைபெறுவது குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன் நகைத்து பாடல் பாடி, தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
சென்னையில் மட்டும் எழும்பூர், பெசண்ட் நகர் உட்பட 5 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வரும் நிலையில், விழுப்புரம் மாவட்டத்திலும் சண்முகபுரத்தில் உள்ள அமைச்சரின் வீட்டில் சோதனை நடைபெறுகிறது. அதேபோல் அமைச்சரின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதம சிகாமணி உட்பட அமைச்சருக்கு தொடர்புள்ளவர்கள் வீட்டில் சோதனை நடைபெறுகிறது. துணை ராணுவத்தினர் உதவியுடன் 7 பேர் கொண்ட அதிகாரிகள் குழு சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தை விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் துரைமுருகன் ஆய்வு செய்தனர். அப்பொழுது, அமைச்சர் வீடுகளில் தொடர்ந்து ரைடு நடத்தப்பட்டுவருவது குறித்து அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் பேசிய போது, ரைடு நடத்துறவங்க கிட்ட தான் கேட்கணும், இது பழிவாங்கும் நோக்கத்தில் செய்யப்படுகிறதா என்று! என கூறியுள்ளார்.
அப்பொழுது, என்ன தான் நாடாகும் நடக்கட்டுமே... இருட்டினில் நீதி மறையட்டுமே... என நகைத்து பாடல் பாடி, தனது கருத்தை பதிவு செய்துள்ளார், அமைச்சர் துரைமுருகன்.