நல்ல பாம்பை தோளில் போட்டப்படி....கடையில் கூலாக டீ குடித்த முதியவர்...வீடியோ வைரல்!

நல்ல பாம்பை தோளில் போட்டப்படி....கடையில் கூலாக டீ குடித்த முதியவர்...வீடியோ வைரல்!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே நல்ல பாம்பை தோளில் போட்டப்படி டீ குடிக்க கடைக்கு வந்த முதியவரின் வீடியோ வைரலாகி வருகிறது.

பாம்பு என்றாலே படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால், இங்கு ஒரு முதியவர் படையே நடுங்கும் பாம்பினை தனது தோளில் போட்டிக்கொண்டு கூலாக டீ குடித்திருக்கிறார். இது குறித்த  வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே பிரானூர் பார்டரில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் கழுத்தில் நல்ல பாம்பை போட்டப்படியே கடைக்கு டீ குடிக்க வந்துள்ளார். இதனைக் கண்டு கடையில் இருந்த அனைவரும் பா...பா....பாம்பு என்ற படிஅலறி அடித்துக் கொண்டு  ஓட்டம் பிடித்தனர்.

இருப்பினும், பாம்பினை தோளில் போட்டப்படியே செம கூலாக நின்றுக்கொண்டு முதியவர் டீ குடிக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ வைரலான நிலையில் நல்ல பாம்புடன் உலா வந்த முதியவர் யார் என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com