
மிகவும் பிரபலமான இந்தி பட பாடலுக்கு நாகலாந்து போலீசார் அணிவகுப்பு நடத்திய வீடியோவை பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மஹிந்திரா குழுமத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா சிந்திக்கத்தூண்டும் கருத்துக்களையும், நகைச்சுவை மிக்க வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்.
அந்தவகையில் இந்திய திரைப்படங்கள் இந்தியாவில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் பலர் ரசித்து பார்க்கும் என்பதை பரைசாற்ற வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில் நாகலாந்து காவலர்களுக்கான பயிற்சி முகாமில், உரத்த சத்தமாக 70களில் பிரபலமான‘கயா தின் ஹோ கயி ஷாம்’ என்ற இந்தி பாடல் ஒலிக்கச்செய்து காவலர்கள் அணிவகுப்பினை நடத்தியிருந்தனர்.