வைரலாகும் புது அரிய வகை கருப்பு வரிப் புலி:

புலிகள் தினத்தை முன்னிட்டு, இணையத்தில் வைரலாகும் பெரும் கருப்பு வரிகள் கொண்ட புலி, தனது எல்லையைக் குறிப்பது போல தெரிகிறது.
வைரலாகும் புது அரிய வகை கருப்பு வரிப் புலி:
Published on
Updated on
2 min read

ஒடிசாவில் உள்ள சிமிலிபால் தேசிய பூங்காவில், அரிய வகை புலி ஒன்று தென்பட்டுள்ளது. அதன் 15 வினாடி விடியோ, சமூக வலைத்தளங்களில் படு வைரலாகி வருகிறது.

கடந்த வாரம் முடிந்த உலக புலிகள் தினத்தை ஒட்டி, இந்திய வனத்துறை அதிகாரியான சுஷாந்தா நந்தா என்பவர், தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்த வீடியோவானது, பலரது கவனத்தையும் பெற்றது.

பொதுவாக புலிகள் கருப்பு வரிகள் கொண்டு இருப்பது சகஜம் தான். ஆனால், வெள்ளை புலிகள் மற்றும் தங்க நிற புலிகளின் உடலில் இருக்கும் கருப்பு வரிகள் சம இடைவெளியுடன் இருக்கும். இந்த அரிய வகை புலிக்கு, கருப்பு வரிகள், அதீத அளவில் இருக்கும் நிலையில், கிட்டத்தட்ட, கடுப்புப் புலியாகவே தோற்றம் அளிக்கிறது.

இவ்வளவு அரிதான புலி, அடிக்கடி, சிமிலிபால் பூங்காவின் கேமராக்களில் தென்படுவதில்லை. அப்படி இருக்க, சமீபத்தில், பூங்காவின் ஒரு பகுதியை, தனது எல்லையாக குறியிடும் போது, அங்கிருந்த பூங்காவின் ஒரு கேமப்ராவில் இந்த புலி பிடிப்பட்டுள்ளது. அரிதாக இருக்கும் காரணத்தால், இதன் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கும் எனக் கூறப்படுவதால், இதன் எண்ணிக்கையைக் குறையாமல் பத்திரமாக இருக்க வைக்க முயற்சி செய்வதாக, இந்த வீடியோவை வெளியிட்ட ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுஷாந்தா தெரிவித்தார்.

உலக புலிகள் தினமான ஜூலை 29ம் தேதி இந்த வீடியோவை வெளியிட்ட சுஷாந்தா, “இந்திய காடுகளின் நிலைத்தன்மையைக் குறிக்கும் அடையாளமாகத் தான் புலிகள் இருக்கின்றன. இன்று, அரிய வகை கரும்புலி, தனது எல்லையைக் குறியிடும் இந்த சுவாரஸ்யமான வீடியோவை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். தனித்துவமான மரபணுக்களைக் கொண்ட இந்த ஜீவன்களைப் பாதுகாக்கும் காப்பகத்தில் இருந்து எடுக்கப்பட்ட வீடொயோவைப் பார்த்து மகிழுங்கள்” என்று பதிவிட்டிருந்தார்.

சிறுத்தைகளுடனான இனக்கலப்பு மூலம் இந்த அரிய வகை பெரும் கரு வரிகள் கொண்ட புலிகள் உருவாகியிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த குறிப்பிடத் தக்க பிறழ்வு இனப்பெருக்கம் (Mutation) மூலம் பிறந்திருக்கும் இந்த வகை புலிகள் இகவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

சிமிலிபாலில் காணப்பட்ட இந்த அரிய புலி சிறிய அளவு இனப்பெருக்கத்தில் இருந்து வந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் யூகிக்கின்றனர். இந்த புலிகள் கிழக்கு இந்தியாவில் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் வாழ்கின்றன என்றும், அவற்றிற்கும் மற்ற புலி இனங்களுக்கும் இடையேயான தொடர்பு எளிதானது அல்ல எனக் கூறப்படும் நிலையில், இவ்வினங்களின் பெருக்கம் மிகவும் கடினமானதாகப் பார்க்கப்படுகிறது. மேலும், விரைவாகவே இவை அழிய வாய்ப்புகள் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் கூறுவது குறிப்பிடத்தக்கது.

இந்த வீடியோவை வெளியிட்ட ஐ.எஃப்.எஸ் அதிகாரியின் பதிவு, அனைவரது கவனத்தையும் பெற்று, வீடியோ வைரலாகி வருகிறது. மேலும், இந்த அரிய வகை புலிகள் முதன் முதலில் 2017ம் ஆண்டு தான் கண்டுபிடிக்கப்பட்டது என மற்றொரு ஐ.எஃப்.எஸ் அதிகாரி பர்வீன் கேசவன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com