மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெறுகிறது...!

மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்   தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெறுகிறது...!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்  சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெறுகிறது. . காலை 11மணியளவில் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், துறை வாரியாக அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் அவற்றை செயல்படுத்தும் நடைமுறைகள் குறித்து ஆலோசனை ஆலோசிக்கப்படுகிறது.

மேலும், கடந்த மாதம் மார்ச் 20-ம் தேதி தமிழக சட்டப்பேரவைகள் நிதிநிலை அறிக்கை தாக்கல் மற்றும் அதன் தொடர்ந்து  மானிய கோரிக்கைகள் மீதான கூட்டம் முடிவடைந்த நிலையில் பேரவையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், அதை செயல்படுத்தும் முறைகள் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.

அதேபோல், ஜனவரி மாதம் நடைபெற உள்ள முதலீட்டாளர்கள் மாநாடு மூலமாக முதலீடுகளை ஈர்க்க அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மேற்கொள்ளும் வெளிநாட்டு பயணம் குறித்தும்,  தமிழக முதலமைச்சரின் ஜப்பான் பயணம் குறித்தும்  கலந்து ஆலோசிக்கபட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.

மேலும், புதிய தொழில் நிறுவனங்களுக்கான அனுமதியும் அமைச்சரவைக் கூட்டத்தில் வழங்கப்பட உள்ளது.
அதோடு, அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு ஓரிரு நாளில் அமைச்சரவை மாற்றம் தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com