கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே தன்னை வளர்ப்பவர் வீட்டிற்குள் நுழைந்த நாகப்பாம்பை நாய் கடித்துக் குதறிய வீடியோ வைரலாகி வருகிறது.
பொள்ளாச்சி அடுத்த ஓரக்கலியூர் கிராமத்தைச் சேர்ந்த தனியார் தோட்டத்தில் மகாலிங்கம் என்பவர் விவசாய பணிகளை மேற்கொண்டு வருகிறார். அவர் தோட்டத்திலேயே தனது குடும்பத்துடன் தங்கி விவசாய பணிகளை செய்து வருகிற நிலையில் நேற்று வழக்கம்போல் விவசாய பணிகளை மேற்கொண்டு வரும் பொழுது அவரது வீட்டுக்குள் 3 அடி நீளமுள்ள நாகப்பாம்பு ஒன்று வீட்டுக்குள் போக முயற்சி செய்துள்ளது.
அதை கண்ட அவரது வீட்டு நாய் ஜூலி பாம்பை வீட்டுக்குள் போகாமல் துரத்தி உள்ளது. இதில் பாம்பு தேங்காய் மட்டை உள்ள பகுதியில் புகுந்து கொண்டது விடாமல் தொடர்ந்து அந்த நாய் பாம்பை துரத்தி அடித்து கடித்துக் கொன்றுள்ளது. விவசாயி வளர்த்த நாய் அதனது உயிரை துச்சம் என்று நினைத்து தனது முதலாளி குடும்பத்தை காப்பாற்றியது அப்பகுதி மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
இதையும் படிக்க: தேர்வில் தோல்வி.. வாழ்க்கையை முடித்து கொண்ட மாணவி...!!