மாலை முரசில் வெளியேறியதன் காரணம் - மனம் திறந்த தி.செந்தில்வேல்
மாலை முரசில் வெளியேறியதன் காரணம் - மனம் திறந்த தி.செந்தில்வேல்
மாலைமுரசு தொலைக்காட்சியில் ”முரசரங்கம்” என்கின்ற விவாத நிகழ்ச்சி தினமும் நடக்கக்கூடிய அரசியல், பொருளாதாரம், விளையாட்டு, சினிமா மக்கள் பிரச்சனைகள், விலைவாசி உயர்வு போன்ற தலைப்புகளில் கடந்த சில ஆண்டுகளாக விவாத நிகழ்ச்சி நடப்பது வழக்கம்.
குரலற்றவர்களின் குரலாய்
முரசரங்கம் விவாத நிகழ்ச்சி தொடங்கும் போதெல்லாம் குரலற்றவர்களின் குரலாய் நான் செந்தில்வேல் என தொடங்கும். இந்த நிகழ்ச்சியில் பலதரப்பட்ட நபர்களின் கருந்துக்களும், கொள்கைகளும் வெளிப்படும். இந்த நிகழ்ச்சியில் நெறியாளர்களில் ஒருவர் தி. செந்தில்வேல் ஆவார். திசம்பர் 1 அன்று நான் இந்த நிகழ்ச்சியே முழுமனதாக முடித்துக்கொள்கிறேன் என முரசரங்கம் நிகழ்ச்சியே நிறைவு செய்தார்.
முகநூல் பதிவு
இரண்டு ஆண்டுகளைத் தாண்டிய முரசரங்கப் பயணத்தை இனிதே நிறைவு செய்தேன்.. தேர்தல் முடிவுகள் உள்ளிட்ட மிக முக்கியமான தினங்களில் மட்டுமாவது வாருங்கள் என்ற நிறுவனத்தின் அன்பான வேண்டுகோளுக்கு முடிந்த வரை முயற்சிக்கிறேன் என்ற பதிலைத் தந்தேன்.. ஊடகத்தில் என் குரல் ஒலிக்கக் கூடாது என்ற போலி தேச பக்தர்களின் ஆசையை நிராசை ஆக்கி 2 ஆண்டுகள் முழு சுதந்திரத்துடன் முரசரங்கத்தை நெறிப்படுத்தும் வாய்ப்பை தந்த மாலை முரசு நிறுவனத்திற்கும், ஐயா திரு. கண்ணன் ஆதித்தன் அவர்களுக்கும் இன்னபிற தோழமைகளுக்கும் , என் சித்தாந்தத்தில் முரண்பட்டாலும் என் மீது கொண்ட அன்பிலும், நான் விவாதத்தில் அவர்களுக்கான வாய்ப்பை சரியாக வழங்குபவன் என்ற நம்பிக்கையிலும் தொடர்ந்து என் விவாதங்களில் பங்கேற்ற வலதுசாரி சிந்தனை கொண்ட நண்பர்களுக்கும் , அனைத்துக் கட்சி தோழர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.. சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கியிருப்பதாலும், வேறு சில புதிய முயற்சிகளுக்குள் பயணிக்க இருப்பதாலும் இந்த குதிரையில் இருந்து இறங்குகிறேன்… குதிரைகள் மாறலாம் பாதை ஒருபோதும் மாறாது.. நன்றி என முகநூலில் பதிவு செய்திருந்தார்.
யூ டியூப் சேனலுக்கு பேட்டி
இதுகுறித்து தமிழ்கேள்வி என்கின்ற யூ டியூப் சேனலுக்கு பேட்டியளித்தவர்.
கேள்வி : நீங்கள் மாலை முரசு நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியதன் காரணம் என்ன?
செந்தில்வேல் பதில்: நியூஸ் சேனல்களிலிருந்து அடுத்த கட்டபயணத்திற்கு பொழுதுபோக்கு சேனலுக்கு செல்லலாம் என முடிவில் இருக்கிறேன். ப்ளாக் சிப் ( black sheep)யூட்டியூப் சேனல் தற்சமயம் தொலைக்காட்சியாக வரவிருக்கிறது. அதில் ஏதாவது நிகழ்ச்சி பண்ணலாமா என்கின்ற பேச்சுவார்த்தை போயிட்டு இருக்கு இரண்டு பக்கமும் பேச்சுவார்த்தை நிறைவுக்கு வந்தால் கண்டிப்பாக நான் பிளாக் சிப் சேனலில் பயணிப்பேன். அதுமட்டுமின்றி திரைப்படங்களிலும் சமீபகாலமாக நடிக்க தொடங்கியிருக்கேன் ஆகையால் முரசரங்கத்தில் தொடர்வது வாய்ப்புகள் மிககுறைவு என கூறினார்.