பில்லு எங்க?... அண்ணாமலையை கலாய்க்கும் நெட்டிசன்கள்!!

பில்லு எங்க?... அண்ணாமலையை கலாய்க்கும் நெட்டிசன்கள்!!

பாஜக தலைவர் அண்ணாமலையிடம் அவரது  கடிகாரத்துக்கான இரசீதை கேட்டு சமூக வலைத் தளங்களில் மீம்ஸ்களை பதிவிட்டு வருன்றனர் இணையதள வாசிகள்.

மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் "நான் கட்டி இருக்கும் கடிகாரமானது ரபேல் விமானத்தைத் தயாரித்த நிறுவனம் அதன் உதிரி பாகங்களால் உருவாக்கியது. மொத்தமாக 500 கடிகாரங்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டன. அதில் 149வது கடிகாரத்தை நான் கட்டி இருக்கிறேன்" என தெரிவித்தார் பாஜக தலைவர் அண்ணாமலை. அவர் அதை வாங்கியதற்கான இரசீதையும் அதற்கான வருவாய் ஆதாரங்களையும் பொதுவெளியில் வெளியிடுமாறு பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த  அண்ணாமலை ஏப்ரல் 1ஆம் தேதி அதற்கான ஆதாரத்தை வழங்குவதாக தெரிவித்திருந்தார்.

இன்று ஏப்ரல் 1ஆம்  தேதி என்பதால் அண்ணாமலையிடம் இரசீது கேட்டு  இணைய தள வாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.  இது டிவிட்டரில் இன்றைய டிரெண்டிங்காக உள்ளது. "ரேர் கலெக்சன் வாட்ச் பிரியர்",  "பில்லு எங்க?", "ஏப்ரல் 1 ஆச்சு! பில்லு என்ன ஆச்சு?" உள்ளிட்ட கேள்விகளை கேட்டு ட்விட்டரிலும் பேஸ்புக்கிலும் மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.