சாக்லேட்டில் நெளிந்த புழு... அதிர்ச்சியில் சாக்லேட் பிரியர்கள்!!!

சாக்லேட்டில் நெளிந்த புழு... அதிர்ச்சியில் சாக்லேட் பிரியர்கள்!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் வெயிலுக்கு சாக்லேட் ஒன்றை வாங்கிய வாலிபர் ஒருவர் அதனைப் பிரித்து பார்த்த போது அதில் புழுக்கள் நெளிந்ததாக கூறப்படுகிறது. 

விலை உயர்ந்த பிரபல நிறுவன சாக்லேட்டில் புழுக்கள் எப்படி வந்தது அதன் காலாவதி தேதி முடிவதற்கு முன்னரே சாக்லேட்டில் புழு கண்டறியப்பட்டது  அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ள நிலையில் இதன் உண்மை தன்மை குறித்து விசாரிக்க உணவு பாதுகாப்பு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.   கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் வெயிலுக்கு சாக்லேட் ஒன்றை வாங்கிய வாலிபர் ஒருவர் அதனைப் பிரித்து பார்த்த போது அதில் புழுக்கள் நெளிந்ததாக கூறப்படுகிறது.  

அந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.  மேலும் இந்த நிகழ்வு சாக்லேட் பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com