பைக் சாகசத்தில் ஈடுபட்டு ‘பிடரி’யில் அடி வாங்கிய இளைஞர்!

காரைக்குடி கல்லூரி சாலையில் பைக்- சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களில் ஒருவர், மாணவிகள் முன்பு கீழே விழுந்து பல்பு வாங்கிய சோக வீடியோ இணையத்தில் படு வைரலாகி வருகிறது.
பைக் சாகசத்தில் ஈடுபட்டு ‘பிடரி’யில் அடி வாங்கிய இளைஞர்!
Published on
Updated on
1 min read

பிரபல காமெடியில் வருவது போல, பொம்பள சோக்கு கேக்குதா? என தற்போது பல இளைஞர்களிடம் கேட்கத் தோன்றும் வகையில் பல விபரீத சாகசங்களில் ஈடுபட்டு, அடி வாங்கி வருகின்றனர். அதன் வீடியோக்களும் வைரலாகி பல்பு வாங்கி வரும் நிலையில், தற்போது, காரைக்குடியில் ஒரு இளைஞர் பிடரியில் அடி வாங்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கல்லூரி சாலையில் கல்லூரி மாணவிகளை  கவர்வதற்காகவும் அவர்களை திரும்பி பார்க்க வைப்பதற்காகவும்  இளைஞர்கள், மாணவர்கள் விலை உயர்ந்த ரேஸ் பைக் மூலம் சாகசங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். பைக் சாகசத்தில் ஈடுபடுபவர்கள் ஒரு சிலர் மீது, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்த நிலையிலும் இது தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

இந்நிலையில் கல்லூரி சாலையில்  அழகப்பா அரசுகலைக்கல்லூரி பேருந்து நிறுத்தம்  அருகில் அழகப்பாபுரம் காவல் நிலையம் எதிரிலேயே ரேஸ்பைக்கில் சென்ற இரு இளைஞர்கள் கல்லூரி மாணவிகளை கவர்வதற்காகவும் திரும்பிப் பார்க்க வைக்கவும் புது புது விதங்களில்  பைக் சாகசங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் பைக்கில் பின்னால் அமர்ந்த இளைஞர் பைக்கில் இருந்து எழுந்து நின்று, டைட்டானிக் படத்தில் ஹீரோ கப்பலில் கையை விரித்து காண்பிப்பது போல வேகமாக பைக்கில் ஏறி நின்று  சாகசம் செய்ய நினைத்து எதிர்பாராத விதமாக கல்லூரி மாணவிகள் முன்பே கீழே விழுந்து பல்ப் வாங்கி விடுகிறார் அந்த இளைஞர். செமத்தியாக அடிவாங்கிய அந்த இளைஞர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.  இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகிவருகிறது.

--- பூஜா ராமகிருஷ்ணன்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com