பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 20 மீனவர்கள் இன்று இந்தியாவிடம் ஒப்படைப்பு

பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 20 மீனவர்கள், இன்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 20 மீனவர்கள் இன்று இந்தியாவிடம் ஒப்படைப்பு

பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 20 மீனவர்கள், இன்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

பாகிஸ்தான் கடல் பகுதியில் சட்டவிரோதமாக மீன் பிடித்ததாக கைதான 20 இந்திய மீனவர்கள், நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.

கராச்சியில் உள்ள லந்தி மாவட்ட சிறையில் இருந்து அவர்கள் நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்கப்பட்டனர். 20 பேரும் ஏதி டிரஸ்ட் பவுண்டேசன் என்ற தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அவர்கள் ரெயில் மூலம் லாகூர் அழைத்து வரப்படுகிறார்கள். பின்னர் அங்கிருந்து வாகா எல்லைக்கு அழைத்து செல்லப்பட்டு, இன்று இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

இதைப்போல, மேலும் 588 இந்தியர்கள் அதே சிறையில் இருப்பதாகவும், சிந்து உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைத்த பிறகு அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் எனவும் சிறை சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.