
இங்கிலாந்து ராணி எலிசபெத் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கைத்தடியுடன் நடக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
ராணி எலிசபெத் நேற்று வெஸ்ட்மின்ஸ்டர் அபேயின் அரச தேவாலயத்தில் நடந்த சிறப்பு சேவையில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தார். அப்போது அவருடன் வந்த இளவரசி, ராணி எலிசபெத்திற்காக கைத்தடி ஒன்றை வைத்திருந்தார்.
பின் குழந்தைகளின் மரியாதையை ராணி எலிசபெத் ஏற்றுக்கொண்ட போது அவர் கைத்தடி உதவியுடனேயே நடந்து வந்தார். 20 ஆண்டுகளுக்கு முன் ராணி எலிசபெத் கைத்தடியை உபயோகித்தார்.
பின் நடந்த அறுவை சிகிச்சைக்கு பின், தற்போது தான் கைத்தடியை உபயோகிப்பது குறிப்பிடத்தக்கது.