ஒரே நேரத்தில் 200 திமிங்கலங்களா? உலகம் எதை நோக்கி போகிறது!
ஆஸ்திரேலியாவில், 200க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் திடீரென கரையொதுங்கிய நிலையில், 35 மட்டுமே உயிர் தப்பிய செய்தி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவில், 200க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள் கரையொதுங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், இந்த வாரம் ஆஸ்திரேலியாவில் சிக்கித் தவித்த பைலட் திமிங்கலங்களில், சுமார் 200 திமிங்கலங்கள் இறந்துவிட்டதாகவும், இன்னும் 35 மட்டுமே உயிருடன் இருப்பதாகவும் மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
பைலட் திமிங்கலங்கள் கடந்த புதன்கிழமை, ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா கடற்கரையில் கரையொதுங்கி வெப்பத்தில் சிக்கிக் கொண்டன. இதனைத் தொடர்ந்து, உயிருடன் இருக்கும் மீதமுள்ள திமிங்கலங்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மேலும் படிக்க | இலங்கைத் தமிழர்கள் 12 பேர் தமிழகத்தில் தஞ்சம்!
டாஸ்மேனியா பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சேவையின் பிரெண்டன் கிளார்க் வியாழக்கிழமை ஆஸ்திரேலியா ஒலிபரப்புக் கழகத்திடம், "இன்று காலையில் நாங்கள் முதன்மையாக அந்த மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுவதிலும், திமிங்கலங்களை விடுவிப்பதிலும் கவனம் செலுத்துகிறோம்" என்று தெரிவித்தார். மேலும், அவற்றில் சில மீண்டும் கடற்கரைக்கு வரக்கூடும் என்பதை அறிந்ததாகவும், அதைக் கண்காணிக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
சுமார் பாதி திமிங்கலங்கள் இன்னும் உயிருடன் இருப்பதாக மீட்புப் பணியாளர்கள் முன்பு மதிப்பிட்டிருந்தனர்.
#watch | டாஸ்மோனியா தீவில் கரை ஒதுங்கிய திமிலங்கள்...#மாலைமுரசு | #ஆஸ்திரேலியா | #திமிலங்கள் pic.twitter.com/tudN1Pi3yH
— Malaimurasu TV (@MalaimurasuTv) September 22, 2022