கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூட்டில் 22 பேர் உயிரிழப்பு... அமெரிக்காவில் பயங்கரம்!

கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூட்டில் 22 பேர் உயிரிழப்பு... அமெரிக்காவில் பயங்கரம்!

அமெரிக்காவின் லெவிஸ்டன் பகுதியில் மருத்துவமனை ஒன்றில்  மர்மநபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 22 பேர் கொல்லப்பட்டனர்.

அமெரிக்காவின் லெவிஸ்டன் பகுதியில்  மெய்ன் என்ற இடத்தில் உள்ள மருத்துவ மனைக்குள் நேற்று இரவு புகுந்த மர்ம நபர் திடீரன கண்மூடித்தனமாக தூப்பாக்கிச் சூடு  நடத்தியுள்ளார்.

இதில் நோயாளிகள், மருத்துவமனை ஊழியர்கள் என 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். 

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த  காவல் துறையினர் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு விசாரணையைத் தொடங்கினர்.

இதில் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட ராபர் கார்ட் என்ற நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்து அவரது புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.

இதனிடையே, துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு  அதிபர் ஜோ  பைடன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com