இங்கிலாந்தில் 2-வது நாள் ரயில் நிறுத்தப் போராட்டம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை மீண்டும் முடக்கம்!!

இங்கிலாந்தில் 2-வது நாள் ரயில் நிறுத்தப் போராட்டம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை மீண்டும் முடக்கம்!!

இங்கிலாந்தில் ரயில்வே தொழிலாளர்களின் 2-வது நாள் போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை மீண்டும் முடங்கியுள்ளது.

அன்றாட வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு அரசு உரிய தீர்வு காண வலியுறுத்தி ரயில்வே தொழிலாளர்கள் ஜுன் 21, 23 மற்றும் 25-ம் தேதிகளில் வேலைநிறுத்தம் என அறிவித்தனர். அதன்படி நேற்று முன்தினம் போராட்டம் நடைபெற்ற நிலையில் இன்றும் வேலைநிறுத்தம் தொடங்கியுள்ளது.

30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நடைபெறும் இந்த வேலைநிறுத்தத்தால் 80 சதவீத ரயில்கள் இயக்கம் பாதிக்கப்பட்டு, மக்களை பெரும் சிரமத்தை சந்திக்க வைத்துள்ளது.

இதனிடையே ரயில்வே தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு பல்வேறு அமைப்புகளும் ஆதரவு தருவதால் இது பல்வேறு துறைகள் பங்கேற்கும் மிகப் பெரிய வேலைநிறுத்த போராட்டமாக மாற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.