பிரிக்ஸ் வளர்ச்சிக்கு 4 அம்ச திட்டங்கள் - சீன அதிபர் ஜி ஜிங்பிங் முன்மொழிவு!!

பிரிக்ஸ் நாடுகள் கூட்டமைப்பு ஒத்துழைப்பின் உயர்தர வளர்ச்சிக்காக நான்கு அம்ச திட்டங்களை சீன அதிபர் ஜி ஜிங்பிங் முன்மொழிந்துள்ளார்.

பிரிக்ஸ் வளர்ச்சிக்கு 4 அம்ச திட்டங்கள்  - சீன அதிபர் ஜி ஜிங்பிங் முன்மொழிவு!!

14- ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் காணொலி வாயிலாக உரையாற்றிய அவர், நேர்மறையான, ஸ்திரத்தன்மை மற்றும் ஆக்கப்பூர்வமான தன்மையைக் கொண்டு வர பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றும்,  அதற்காக சமத்துவம், நீதியை கடைப்பிடிப்பதுடன் பனிப்போர் மனப்பான்மை மற்றும் ஒருதலைப்பட்சமான துஷ்பிரயோக பொருளாதாரத் தடைகளை எதிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இரண்டாவதாக, தொற்றுநோயைத் தோற்கடித்து பொதுமக்களின் உயிர்களைப் பாதுகாப்பதில் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றார். மூன்றாவதாக, பொருளாதார மீட்சிக்கான பலத்தை திரட்ட வேண்டும் என்றும் தொழில்துறை மற்றும் விநியோகச் சங்கிலிகளைப் பாதுகாப்பாகவும், தடையின்றியும் வைத்திருக்க வேண்டும் என்றும் கூறினார்.

நான்காவதாக, நிலையான மற்றும் மக்களை மையமாகக் கொண்ட வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு வறுமை ஒழிப்பு, உணவு, கல்வி, சுகாதாரம் உள்ளிட்டவற்றில்  அதிக முதலீடு செய்ய வேண்டும் என்றும் ஜிங்பிங் கேட்டுக் கொண்டார்.