75வது சுதந்திர தினமும்..... மக்கள் போராட்டமும்.....

இலங்கையில் 75-வது சுதந்திரதினவிழாவை முன்னிட்டு கண்களை கவரும் வகையில் முப்படையினா் அணிவகுத்து சென்றனா். 
75வது சுதந்திர தினமும்..... மக்கள் போராட்டமும்.....

கொழும்பு காலி முகத்திடலில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் பிரமாண்டமாக நடைபெற்றது.  அதில் முப்படையினர், சிறப்பு காவல் படையினா், ஓய்வு பெற்ற முன்னாள் முப்படை வீரர்கள் என 6 ஆயிரத்து 410 படை வீரர்கள் பங்கேற்ற அணிவகுப்பு நடந்தது.  இது அனைவாின் கண்களையும் கவா்ந்தது. 

குடியரசுத் தலைவர் உரை:

சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும் மனதில் கொண்டு ஒற்றுமையுடன் திட்டமிட்டு முன்னேறினால் 2048-ம் ஆண்டில் வல்லரசு நாடாக இலங்கை மாறும் என குடியரசு தலைவா் ரணில் விக்ரமசிங்கே நம்பிக்கை தொிவித்துள்ளாா்.  

ஒன்றாக போராடலாம்:

இலங்கையின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கே மக்களுக்கு ஆற்றிய உரையில், மக்களை ஏமாற்றும் ஊழல் அரசியல் வாதத்தை தோற்கடிக்க வேண்டும் என கூறிய அவா் அனைவரும் ஒற்றுமையுடன் திட்டமிட்டு முன்னேறினால் 2048-ம் ஆண்டில் வல்லரசு நாடாக இலங்கை மாறலாம் எனத் தொிவித்தாா். 

போராட்டம்:

நாட்டில் பொருளாதாரம் வலுவிழந்து வரும் நிலையில் இது போன்ற ஆடம்பரமான அணிவகுப்பு தேவை தானா எனவும் அதிக பொருள் செலவிலான கொண்டாட்டங்கள் அவசியமா என கேள்வி எழுப்பி போராட்டம் நடத்தியுள்ளனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com