வெளிநாட்டு சிறைகளில் 8,330 இந்தியர்கள்!

வெளிநாட்டு சிறைகளில் 8,330 இந்தியர்கள்!

8,330 இந்தியர்கள் பல்வேறு நாடுகளில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளீதரன் இதனை தெரிவித்துள்ளார். 90 வெளிநாடுகளில் உள்ள சிறைகளில் 8,330 பேர் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதிக அளவாக ஐக்கிய அரபு அமீரகத்தில் 1,611 பேரும், நேபாளத்தில் 1,222 பேரும் அடைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதேபோல், கத்தார், குவைத், மலேசியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் உள்ள சிறைகளில் இந்தியர்கள் உள்ளதாகவும் மத்திய அமைச்சர் முரளீதரன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க:"யாரும் ஏஜெண்டுகளை நம்பி வெளிநாடு செல்ல வேண்டாம்" பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர்!