பல்கேரிய தீர்க்கதரிசி பாபா வெங்கா கூறிய தீர்க்கதரிசனம்!!!கலக்கத்தில் ரஷ்ய போர்வீரர்கள்!!!

பல்கேரிய தீர்க்கதரிசி பாபா வெங்கா கூறிய தீர்க்கதரிசனம்!!!கலக்கத்தில் ரஷ்ய போர்வீரர்கள்!!!
Published on
Updated on
1 min read

உலகின் புகழ்பெற்ற தீர்க்கதரிசிகளில் ஒருவரான பல்கேரிய தீர்க்கதரிசி பாபா வெங்கா பல கணிப்புகளை வழங்கியுள்ளார். இதுவரை அவருடைய பல கணிப்புகள் உண்மையாகியுள்ளன. சோவியத் யூனியனின் பிரிவு, அமெரிக்காவில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு 9/11 தாக்குதல் உள்ளிட்ட பல கணிப்புகளை பாபா வெங்கா சரியாக கணித்துள்ளார். அவரது இந்த கணிப்புகள் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 

இது மட்டுமல்லாமல், 2022 ஆம் ஆண்டிற்கான பல பயங்கரமான கணிப்புகளையும் பாபா வெங்கா செய்திருந்தார்.  அவையும் உண்மையாகவே இருந்ததுள்ளது.  ரஷ்யா-உக்ரைன் போரையும் அவர் துல்லியமாக கணித்ததாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் இரு நாடுகளுக்கு இடையேயான இந்த போர் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கலாம் என்று கூறப்பட்டு வருகிறது. 

பாபா வெங்காவின் இந்த கணிப்பால் இரு நாட்டு வீரர்களும் கலக்கம் அடைந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. போரில் ஈடுபட்டுள்ள ரஷ்ய ராணுவ வீரர் மற்றும் அவரது மனைவிக்கு இடையேயான தொலைபேசி உரையாடல் உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகத்தால் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

பாபா வெங்காவின் கணிப்பு குறித்து பேசிய ரஷ்ய ராணுவ வீரரின் மனைவி, சந்திக்க இன்னும் எத்தனை நாட்கள் ஆகும் என கதறி அழுதுள்ளார். அப்போது “ ஒருவரை ஒருவர் பார்த்து வெகு நாட்களாகிவிட்டது.” என்று மனைவி கேட்க  ”இப்போது தைரியம் வேண்டும்.  வீடு திரும்ப எவ்வளவு காலம் ஆகும் என்பது இன்னும் தெரியவில்லை. இப்போது வீடு திரும்ப முடியாது, இப்போது முடியாது.” என்று சிப்பாய் தன் மனைவியிடம் விளக்குகிறார். 

உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள காணொளியில், கணவரிடம் இடைமறித்த தொலைபேசி அழைப்பின் போது பெண் அழுவதைக் கேட்க முடிகிறது. சிப்பாயின் மனைவி இருவரின் சத்தமும் கேட்கிறது. அந்த ஆடியோவில், வெங்காவின் கணிப்பின்படி எங்கள் போர் 2024 வரை நீடிக்கும் என்று ரஷ்ய ராணுவ வீரர் தனது மனைவியிடம் கூறுவதை கேட்க முடிகிறது. 2024 வரை போர் நீடிக்கும் என்றால் பாபா வெங்கா சரியாக கணித்துள்ளதாகவே தோன்றுகிறது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com