தலைநகர் கொழும்புவில் ராணுவத்தை களமிறக்கியுள்ள கோத்தபய ராஜபக்சே!

தலைநகர் கொழும்புவில் ராணுவத்தை களமிறக்கியுள்ள கோத்தபய ராஜபக்சே!
Published on
Updated on
1 min read

அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தி நாளை மிகப் பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ள நிலையில் தலைநகர் கொழும்புவில் ராணுவம் குவிக்கப்பட்டு வருவதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. 

கோத்தபய ராஜ்சபக்சே பதவி விலக வேண்டும்:

பொருளாதார நெருக்கடியை எதிர்த்து அமைதி வழியில் போராடி வந்த இலங்கை மக்கள் ஒரு கட்டத்தில்  பொங்கி எழுந்ததால் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே பதவி இழந்து தப்பி ஓடி குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டார். ஆனாலும், ராணுவத்தின் உதவியுடன் அதிபராக அவரது சகோதரர் கோத்தபய இன்னும் நீடிக்கிறார். இந்தநிலையில் அவரும் பதவி விலக வேண்டும் என்ற மக்களின் குரல் வலுவடைந்து விட்டது.

கொழும்புவில் நாளை ஆர்ப்பாட்டம்:

கோத்தபய பதவி விலக வலியுறுத்தி நாளை 9 மணியளவில் கொழும்புவில் மிகப் பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தடை கேட்ட காவல்துறையின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. அமைதியான முறையில் போராட்டம் நடத்தலாம் என்றும் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் கொழும்பு நோக்கி மக்கள் புறப்படத் தொடங்கியுள்ளனர். ஆயிரக்கணக்கான புத்த துறவிகள் ஏற்கனவே கொழும்பு வந்தடைந்து விட்டனர். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவும் பதவி விலக வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள போரட்டத்திற்கு மக்கள் எழுச்சி கலைஞர்கள் வசனத்துடன் கூடிய ஒரு நோட்டீஸ் வெளியிட்டுள்ளனர். அதில் கோட்டாவை விரட்ட வரிசையில் வாருங்கள்! என்ற வசனம் இடம்பெற்றுள்ளது.

ஆர்ப்பாட்டத்தை ஒடுக்க குவியும் காவல் மற்றும் இராணுவ துறை:

தலைநகர் கொழும்புவில் மக்கள் நாளை போராட்டத்தில் ஈடுபட்டால் அதனை ஒடுக்கும் வகையில் கொழும்புவில் காவல்துறையையும் ராணுவத்தையும் கோத்தபய குவித்து வருகிறார். இதனால் இலங்கையில் பதற்றநிலை உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com